லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

மாருதி நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலான மாருதி ப்ரெஸ்ஸா லேண்ட் ரோவர் க்ரில்லுடன் சாலையில் வலம் வந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

இந்தியாவின் புகழ்பெற்ற மாருதி நிறுவனம் தனது தயாரிப்பான விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலை 2016ம் ஆண்டுதான் அறிமுகம் செய்தது. இந்திய எஸ்யூவி கார்கள் சந்தையில் ப்ரெஸ்ஸா எஸ்யூவி கார் கடந்த நான்கு வருடங்களாக விற்பனையில் வெற்றிநடை போடுகிறது. டீசல் என்ஜினில் மட்டும் வெளிவந்த விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் என்ஜின் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

மாருதி ப்ரெஸ்ஸா எஸ்யூவி சமீபத்தில் ஜீப் நிறுவன சிக்னேட்சர் 7 ஸ்லாட் க்ரில்லுடன் இந்திய சாலைகளில் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது ப்ரெஸ்ஸா லேண்ட் ரோவர் ஹனிகாம்ப் க்ரில்லுடன் சாலையில் வலம் வந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்து தொடர்பனாக செய்தி மற்றும் புகைப்படத்தினை கார்டாக் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

லேண்ட் ரோவர் ஹனிகாம்ப் க்ரில்லுடன் ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரினை பார்ப்பதற்கு லேண்ட் ரோவர் ஃப்ரீலாண்டர் 2 மற்றும் டிஸ்கவரி காரினை போன்ற தோற்றத்தினை தருகிறது. இந்த மாற்றியமைக்கப்பட்ட கார் ப்ரெஸ்ஸா எஸ்யூவி கார் பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது. ப்ரெஸ்ஸா தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வருவதால் மாருதி நிறுவனம் ப்ரெஸ்ஸா டிசைனை மாற்றுமா என கேள்வி எழுந்துள்ளது.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. ஒரு மாதத்தில் சராசரியாக 12,000 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் டீசல் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாக மாருதி அறிவித்துள்ளது. இதன் காரணமாக மாருதி நிறுவனம் பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

இந்நிலையில் புதிதாக விற்பனைக்கு களம் இறங்கிய ஹூண்டாய் வெனியூ, மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களால் ப்ரெஸ்ஸா எஸ்யூவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. இதனை சமாளிக்க மாருதி நிறுவனம் ப்ரெஸ்ஸா எஸ்யூவி ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில் முந்தைய ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரை விட பல கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டன.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட் எஸ்யூவி காரில் 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்த மாருதி நிறுவனம் முடிவுசெய்துள்ளது.தற்போது விற்பனையில் இருக்கும் பிரெஸ்ஸா டீசல் வேரியண்ட் பியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் என்ஜின் தேர்வில் கிடைக்கிறது.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

இந்த சக்திவாய்ந்த 1.3 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இதில் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்கு உள்ளது.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வரவுள்ளது இதனால் பியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் என்ஜினை மேம்படுத்தும் திட்டம் இல்லை என அறிவித்தது. இதனை கருத்தில் கொண்டு மாருதி நிறுவனமும் டீசல் வெறியாண்டினை நிறுத்த முடிவு செய்தது.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

ப்ரெஸ்ஸா எஸ்யூவி தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வருவதால் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் பெட்ரோல் வேரியண்டின் டிசைனில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

லேண்ட் ரோவராக மாறிய மாருதி ப்ரெஸ்ஸா: வைரலாகும் புகைப்படம் உள்ளே

பல மாற்றங்கள் கார்களில் செய்து அறிமுகம் செய்தாலும். மோடிஃபைட் கார்களுக்கு உள்ள ரசிகர் கூட்டம் இருக்கும் வரை ப்ரெஸ்ஸா எஸ்யூவி போன்ற கார்கள் மாற்றியமைக்கப்படுத்துவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Brezza wants to be a Land Rover: Read in Tamil
Story first published: Tuesday, June 4, 2019, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X