பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

இந்திய முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி மீண்டும் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்து சாதனை புரிந்துள்ளது. பிஎஸ்- 6 எனப்படும் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான மாருதி கார்கள் இந்தியாவில் கடந்த ஆறு மாதத்தில் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

மாருதி சுசுகி நிறுவனம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் முதல் பிஎஸ்6 காராக ஆல்டோ 800-ஐ அறிமுகம் செய்தது. அதன்பின் இந்நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து ஆல்டோ, பலேனோ, ஸ்விஃப்ட், டிசைர், வேகன் ஆர்(1.2லி), எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் சமீபத்தில் அறிமுகமான எஸ்-பிரெஸ்ஸோ என 8 மாடல் கார்கள் பிஎஸ்6 கார்களாக சந்தையில் இறக்குமதியாகின.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

இந்த மாருதியின் புதிய சாதனை குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ மிஸ்டர்.கெனிச்சி அயுகாவா கூறுகையில், எங்களது பிஎஸ்6 வகை கார்களை ஊக்குவித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறி கொள்கிறோம். இந்த ஊக்குவிப்பே எங்களது புதிய தொழிற்நுட்பங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

இந்த பிஎஸ்6 தரத்திற்கு இணையான இந்த 8 பெட்ரோல் கார்களும் விற்பனையில் இவ்வளவு பெரிய மைல்கல்லை அடைவதற்கு உதவிகரமாக அமைந்தது நாங்கள் வைத்துள்ள வாடிக்கையாளர்களின் மிக பெரிய அடித்தளம் தான் என்றார்.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

மேலும் கூறிய அவர், இந்திய அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்த தூய்மையான மற்றும் பசுமையான சூழல் திட்டம் தான் எங்களை தொடர்ந்து பிஎஸ்6 வகை கார்களாக தயாரிக்க உந்துவிசையாக இருந்தது எனவும் கூறினார்.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

மாருதி சுசுகியின் அனைத்து பிஎஸ்6 வகை மாடல்களும் மார்கெட்டில் சிறந்த விற்பனையாளர்களை பெற்று தந்தது. காலக்கெடுவுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்டோ 800 மற்றும் பலேனோ உள்பட அனைத்து பிஎஸ்6 கார்களையும் அறிமுகப்படுத்த கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாருதி சுசுகி நிறுவனம் திட்டங்களை தீட்டி வந்தது.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

மாருதி சுசுகியின் அனைத்து பிஎஸ்6 கார்களும் எந்தவொரு உதவிகரங்களுமின்றி பிஎஸ்4 எரிபொருளிலும் ஓடக்கூடியவை. மேலும் 2020 ஏப்ரலுக்கு முன்பே இக்கார்களின் எரிபொருளிலும் அப்டேட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த பிஎஸ்6 கார்களின் என்ஜின்கள் 25 சதவீதம் மாசு உமிழ்வை குறைக்கின்றன.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எஸ்-பிரெஸ்ஸோ மினி-எஸ்யூவி இந்தியாவில் எக்ஸ்ஷோரூம்களில் ரூ.3.69 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. அதுகுறித்த முழு தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

இந்த எஸ்-பிரெஸ்ஸோவில் ஆல்டோ கே10 மாடலில் உள்ள அதே 1.0 லிட்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்-பிரெஸ்ஸோ என்ஜினின் தரம் பிஎஸ்6க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் கார் தான் மாருதி சுசுகி வெளியிட்ட முதல் பிஎஸ்6 1.0 லிட்டர் என்ஜினை கொண்ட கார் ஆகும். ஆல்டோ கே10-ன் என்ஜினும் விரைவில் பிஎஸ்6 தரத்துக்கு மாற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்6 கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி!

இந்தியாவில் அதிகளவில் பிஎஸ்6 வகை கார்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் மாருதி சுசுகி தான். இதன் பிரபல மாடல் கார்கள் அனைத்தும் 2020 ஏப்ரலுக்குள் பிஎஸ்6 என்ஜினுக்கு மாற்றப்பட்டுவிடும் என்றே தெரிகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki BS6 Car Sales In India: Achieves Two Lakh Sales Milestone In Six Months
Story first published: Saturday, October 5, 2019, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X