மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை சற்று மந்தமாக இருந்து வருகிறது. எனினும் பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை, கடந்த எட்டு மாதங்களாக சற்று மந்தமாகவே இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்தியாவில் கார்களுக்கான தேவை குறைந்துள்ளது என்பது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கூற்று.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

இந்தியாவில் மாருதி சுஸுகியின் மந்த நிலைக்கு, எதிர்வரும் 2019 நாடாளுமன்ற பொது தேர்தல் ஒரு முக்கிய காரணம் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகவா எகனாமிக் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

இதுகுறித்து அவர் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தேவை மந்தமாகியுள்ளது. இது உண்மைதான். சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களை நாங்கள் எப்படி கண்டறிய போகிறோம்? என்பதே முக்கியமான பிரச்னை. இதற்கு நேரம் பிடிக்கும்.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

இருந்தபோதும் தேர்தலுக்கு பிறகு மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார். புதிய வேகன் ஆர் ஹேட்ச்பேக் லான்ச் ஆனதால், நான்காவது காலாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் 5 சதவீத விற்பனை வளர்ச்சியை எதிர்பார்த்தது.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

ஆனால் மார்க்கெட்டில் நிலவும் மந்த நிலை காரணமாக, ஜனவரி மாதத்தில் வெறும் 1.1 சதவீதமும், பிப்ரவரி மாதத்தில் வெறும் 0.9 சதவீதமும் மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் வளர்ச்சியை சந்தித்துள்ளது.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் உள்நாட்டில் 6வது முறையாக, பயணிகள் வாகன விற்பனையில், சரிவை கண்டுள்ளது. இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வாடிக்கையாளர்களின் சென்டிமெண்ட்கள் ஆகியவையும் தனியாக வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடுகின்றன.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

இதனால் நிதியாண்டு விற்பனை திட்டங்களை, மாருதி சுஸுகி திருத்தியமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இரட்டை இலக்க வளர்ச்சி என்ற இலக்கை, மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே 8 சதவீதமாக திருத்தியமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

இந்தியாவில் தற்போது கார் உற்பத்தியாளர்கள் சந்தித்து கொண்டிருக்கும் மற்றொரு முக்கியமான சவால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மாறுவதுதான். மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், இந்தியாவில் அமலுக்கு வரவுள்ளன.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, தயாரிப்பு, சரக்கு மேலாண்மை என பல்வேறு சவால்களை கார் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர். அயுகவா கூறுகையில், ''எரிபொருள் நுகர்வை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ஒரே வழியில் அதிக கவனம் செலுத்த முடியாது என நினைக்கிறேன்.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

இந்த இலக்கை எட்ட பல்வேறு வழிகள் உள்ளன. இதில், எலெக்ட்ரிக் ஒன்று. மற்றொன்று ஹைபிரிட். இதுதவிர சிஎன்ஜி உள்ளிட்ட வழிகளும் உள்ளன'' என்றார். மாருதி சுஸுகி நிறுவனம், வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின், சிஎன்ஜி வேரியண்ட்டை சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், ரூ.4.85 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். சிஎன்ஜி மாடல் தவிர, இந்திய மார்க்கெட்டிற்கான முதல் எலெக்ட்ரிக் வாகனத்தையும் மாருதி சுஸுகி நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் அந்த வாகனம். வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் லித்தியம் இயான் பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைக்க, டொயோட்டா இந்தியாவுடன் இணைந்தும் மாருதி சுஸுகி பணியாற்றி வருகிறது.

மந்தமான நிலையில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை... பொது தேர்தலுக்கு பின் சூடுபிடிக்கும் என நம்பிக்கை

மாருதி சுஸுகி விற்பனை மந்த நிலை பற்றிய கருத்து:

இந்தியாவில் சமீப காலமாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது. மாருதி சுஸுகி தவிர மேலும் சில கார் நிறுவனங்களும் தற்போது இதே நிலையில்தான் உள்ளன. என்றாலும் இந்தியாவில் பொது தேர்தல் முடிந்த பிறகு விற்பனை அதிகரிக்கும் என அனைத்து நிறுவனங்களும் நம்புகின்றன.

Most Read Articles
English summary
Maruti Suzuki Sales In India — Low Sales Growth To Continue Till End Of Election Period. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X