விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!

மாருதி எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் கொடுக்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ் மற்றும் எர்டிகா உள்ளிட்ட பல கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!

இந்த சூழலில், அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதையடுத்து, இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சினை மேம்படுத்த ஃபியட் விரும்பவில்லை. எனவே, மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை உருவாக்கியது.

விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!

இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் முதலாவதாக சியாஸ் காரில் பொருத்தப்பட்டு நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாருதி எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் விரைவில் வழங்கப்பட உள்ளது.

விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!

இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. அத்துடன், புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்த எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் வழங்கப்பட இருக்கிறது.

விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!

இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். அத்துடன், சிறப்பான மைலேஜையும், குறைவான மாசு உமிழ்வு தன்மையையும் பெற்றிருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. பழைய 1.3 லிட்டர் டீசல் எஞ்சினைவிட சற்றே கூடுதல் செயல்திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!

புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்படுவதால் மாருதி எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களின் விலை சற்று அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. தற்போது மாருதி எர்டிகா கார் ரூ.7.44 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், எஸ் க்ராஸ் கார் ரூ.8.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!

மாருதி சியாஸ், எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள் மட்டுமின்றி, விட்டாரா பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட், டிசையர் கார்களிலும் இந்த புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. அதற்குள் இந்த எஞ்சின் ஆப்ஷன் பெரும்பாலான மாருதி கார்களில் இடம்பெற்றுவிடும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki recently introduced its new in-house developed 1.5-litre diesel engine on the Ciaz sedan in India. The Maruti Ciaz with the new diesel engine is now offered at a starting price of Rs 9.97 lakh, ex-showroom (Delhi).
Story first published: Friday, March 29, 2019, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X