மாருதி இக்னிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் அறிமுகம்!

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய இக்னிஸ் மாடலை மாருதி களமிறக்க உள்ளது.

புதுப்பொலிவுடன் மாருதி இக்னிஸ் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டு மாருதி ரிட்ஸ் காருக்கு மாற்றாக, புதிய இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹேட்ச்பேக் ரகத்தில் சற்றே பிரிமீயம் மாடலாகவும், அதேநேரத்தில் மாருதி ஸ்விஃப்ட் காரைவிட விலை குறைவான தேர்வாகவும் களமிறக்கப்பட்டது.

புதிய மாருதி இக்னிஸ் கார் விரைவில் அறிமுகம்!

இளைஞர்களை குறிவைத்து களமிறக்கப்பட்ட இந்த கார் விற்பனையில் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், சந்தையில் பல புதிய மாடல்கள் வந்துவிட்டதால், இக்னிஸ் காரின் மீதான வாடிக்கையாளர்களின் கவனம் குறைந்துவிட்டது.

எனவே, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய இக்னிஸ் மாடலை மாருதி களமிறக்க உள்ளது. இந்த மாத இறுதியிலேயே இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய இக்னிஸ் காரில் முகப்பு க்ரில், ஹெட்லைட்டுகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளிட்டவை டாப் வேரியண்ட்டில் சேர்க்கப்பட உள்ளன.

புதிய மாருதி இக்னிஸ் கார் விரைவில் அறிமுகம்!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இக்னிஸ் காரிலும் இடம்பெற இருக்கிறது.

புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு தக்கவாறு அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, சீட் பெல்ட் அணிவது குறித்த எச்சரிக்கை, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், டியூவல் ஏர்பேக்குகள் ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தரமாக வழங்கப்பட இருக்கின்றன.

எஞ்சின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி இக்னிஸ் கார் விரைவில் அறிமுகம்!

அறிமுகம் செய்யப்பட்டபோது டீசல் மாடலிலும் வந்தது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. பழைய வேரியண்ட்டுகள் தக்க வைக்கப்படும்.

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட புதிய மாருதி இக்னிஸ் கார் கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். டாடா டியாகோ, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki is all set to launch its new Ignis facelift in the Indian market. According to reports, the new Maruti Ignis facelift is scheduled to go on sale sometime later this month (February-2019).
Story first published: Saturday, February 16, 2019, 11:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X