விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்!

35 ஆண்டுகளாக இந்திய வாகன சந்தையில் விற்பனையாகி வரும் மாருதி ஆம்னி வேனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடலான ஆம்னி வேன், கடந்த 35 ஆண்டுகளாக இந்திய வாகனச் சந்தையில் புரட்சியை செய்து வருகிறது. அதாவது, இந்த வேன் கடந்த 1984ம் ஆண்டு முதல் இந்தியா வாகனச் சந்தையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வேனின் உற்பத்தி மற்றும் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த வாரத்தில் இருந்து முடக்கி இருப்பதாக காடிவாடி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

மாருதி சுஸுகியின் இந்த ஆம்னி வேன் பல நடுத்தர குடும்பத்தினரின் சிம்ம சொப்பனமாக விலங்கி வந்ததது என்று கூறினால் மிகையாகாது. ஏனென்றால், இந்த வேன் தனி நபர் சந்தையில், 5 சீட்டர் மற்றும் 8 சீட்டர்களாக கிடைக்கின்றது. ஆகையால், இது குடும்பத்தோடு வெளியேச் செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

இதேபோன்று, கமர்சியல் சந்தையிலும் இந்த வேன் பெருமளவில் பயன்பாட்டினை அளித்து வருகிறது. அவ்வாறு, ஆம்புலன்ஸ் மற்றும் கார்கோவாக தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது ஆம்னி. மேலும், இந்த வேன் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, நோயாளிகளை மருத்துவமனை அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பான சேவையை அளித்து வருகிறது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

டிரைவர் உட்பட எட்டு பேர் வரை பயணிக்கும் வகையில், மிக மலிவான விலையில் இந்த வேன் கிடைப்பதால், இந்தியர்கள் மத்தியில் ஆம்னி பெரும் வரவேற்பை தற்போது வரை பெற்று வருகிறது. அவ்வாறு, இது விற்பனையில் இருந்த வரை ஒவ்வொரு மாதமும் கணிசமாக 5 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

இந்நிலையில், ஆம்னியை விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்வதாக மாருதி சுஸுகி, கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, கடந்த வாரத்தில் இருந்து இதனை முடக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாருதியின் இந்த திடீர் முடிவு இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

மேலும், மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு காரணமாக புதிய பாதுகாப்பு விதிமுறைகள் இருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த புதிய முறையில் விற்பனைக்கு வரும் வாகனங்கள் கிராஷ் டெஸ்ட் செய்யப்படும். அதில் எந்த வாகனம் பயணிகளின் பாதுகாப்பினை குறைந்தபட்சமாவது உறுதி செய்கிறதோ அந்த வாகனத்திற்கும் மட்டும்தான் விற்பனை உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

இதனைச் சமாளிக்கும் விதமாகவே இந்த திடீர் அறிவுப்பு வெளியிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. மேலும், மாருதி சுஸுகியின் புதிய மாடலான ஈக்கோ-வை இந்த புதிய விதிமுறைக்கு ஏற்ப மேம்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்தே, ஆம்னியின் விற்பனையையும் முடக்கிக் கொள்ளவதாக அந்த நிறுவனம் அறிவத்தது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

இந்த நிலையில், மாருதியின் புதிய எம்பிவி ரக மாருதி ஈக்கோ கார், பட்ஜெட் விலையில் பாதுகாப்பு அம்சங்களுடன் கடந்த 1ம் தேதி முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 7 சீட்டர் மாடலாக வெளிவந்துள்ள இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

புதிய மாருதி ஈக்கோ காரில் இபிடி வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஓட்டுநருக்கான ஏர்பேக் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு வசதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதிகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, இதன் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த பாதுகாப்பு வசதிகள் நிரந்தரமானதாக அளிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

இந்த கார் ஆம்னியைப் போன்றே தனியார் மற்றும் கமர்ஷியல் சந்தையைக் கவரும் வகையில் உறுவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது தனிநபர் மற்றும் வர்த்தக ரீதியாக இயங்கும் நிறுவனங்களுக்கு பெரிய பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட ஆம்னி...? மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு இது தான் காரணம்...!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 73 எச்பி பவரையும், 101 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிஎன்ஜி மாடலில் இருக்கும் இதே பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 63 எச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த புதிய மாடல் மாருதி ஈக்கோ கார் ரூ. 3.55 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Maruti Omni Bows Out From Sale. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X