மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி எரிபொருள் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

கடந்த மாதம் 30ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மிக குறைவான விலையில், எஸ்யூவி போன்ற தோற்றத்தில் வந்துள்ளதுடன், இன்ஃபோடயெின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

இந்தநிலையில், மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் டீசல் மாடல் இல்லை என்பது உறுதியான விஷயம்தான். ஆனால், அதற்கு பதிலாக மற்றொரு தேர்வாக, சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது உறுதியாகி இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

மாருதி நிறுவனம் தரப்பில் எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வு அம்சமும் இடம்பெற்றுள்ளது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

ஆனால், சிஎன்ஜி எரிபொருள் தேர்வு குறித்த எழுத்துக்கள் தற்போது செயல்படாத நிலையில் பெட்ரோல் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே சிஎன்ஜி மாடலில் ஒளியூட்டும் முறையில் செயல்படும் வகையில் காட்டும். எனவே, மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் சிஎன்ஜி மாடல் என்பது உறுதியாகிவிட்டது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இந்த புதிய சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கலாம். டீசல் மாடல் இல்லாத குறையை இந்த சிஎன்ஜி மாடல் போக்கும் என்பதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பதால், வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் எஸ்யூவி போன்ற தோற்றம், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பது இந்தியர்களை கவரும் விஷயமாக இருக்கிறது. அதேபோன்று, மினி கார்களில் இருப்பது போல வட்ட வடிவிலான சென்ட்ரல் கன்சோல் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

இந்த சென்ட்ரல் கன்சோலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் என்பதுடன், நேவிகேஷன், புளூடூத் வசதிகளையும், மியூசிக் சிஸ்டத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய அம்சமாக கூறலாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் விரைவில் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ, ரெனோ க்விட் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடுகிறது.

Source: Cartoq

Most Read Articles
English summary
Maruti is working on CNG variant of S Press micro SUV and it will be launched in India very soon.
Story first published: Saturday, October 5, 2019, 14:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X