19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ வரிசை கார்கள் எப்போதுமே சிறந்த விற்பனை எண்ணிக்கையை இந்திய மார்க்கெட்டில் மாதந்தோறும் பெற்றுவிடக்கூடியவை. 2000ல் முதல் ஆல்டோ மாடல் காரை இந்தியாவில் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து தற்போதுவரை 19 ஆண்டுகளில் சுமார் 38 லட்சம் ஆல்டோ வரிசை கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

இந்த 19 ஆண்டுகளில் முதல் 15 ஆண்டுகள் ஆல்டோ மாடல் தான் இந்தியாவின் மிக சிறந்த விற்பனை காராக விளங்கியது. இதற்கிடையில் ஆல்டோ கார்களின் எண்ணிக்கை 8 வருடங்களிலேயே 10 லட்சத்தை மிக எளிதாக எட்டியது. இந்த அளவிற்கு ஆட்டோ மாடல்கள் விற்பனையான போதிலும் ஆல்டோவின் அடுத்த தலைமுறைக்கான மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் மறக்கவில்லை.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

10 லட்சம் விற்பனை எண்ணிக்கை அடைந்த 2008-ற்கு இரண்டு வருடங்கள் கழித்து, அதாவது 2010ல் மாருதி நிறுவனத்தில் இருந்து புதிய ஆல்டோ வரிசை காராக ஆல்டோ கே10 முந்தைய மாடலை விடவும் நவீன தொழிற்நுட்பங்கள் மற்றும் அதிக திறன் வாய்ந்த என்ஜினுடன் அறிமுகமானது.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

இதன் அறிமுகத்திற்கு பிறகு ஆல்டோ காரை பற்றி தெரியாத இந்திய வாடிக்கையாளர்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் 10 லட்ச விற்பனை எண்ணிக்கையை தொட 8 வருடங்களை எடுத்தக்கொண்ட ஆல்டோ மாடல், அடுத்த 10 லட்சத்தை வெறும் 4 ஆண்டுகளில் 2012ல் தொட்டது.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

ஆனால் அதன் பின்னர் தான் ஆல்டோ மாடலுக்கு பிரச்சனையே இருந்தது. மாருதி நிறுவனம் ஆல்டோ வரிசையில் அடுத்ததாக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த ஆல்டோ 800 மாடலை க்ளோபல் என்சிஏபி அமைப்பிற்கு க்ராஷ் டெஸ்ட்டிற்காக அனுப்பியது. இதில் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியாகும்படி ஆல்டோ 800 மாடல் வெறும் பூச்சியம் ஸ்டாரை பெற்றது. இது மாருதி நிறுவன கார்களின் பாதுகாப்பு மீது வாடிக்கையாளர்களுக்கு மிக பெரிய கேள்வியை எழுப்பியது.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

என்சிஏபி அமைப்பின் இந்த முடிவில் இருந்து, ஆல்டோ கார்களின் வெளிப்புறங்கள் விபத்துகளில் அதிகளவில் சேதம் அடையும் விதத்தில் உள்ளன என்றும் இதன் காற்று பைகள் விபத்தின் வீரியத்தை குறைக்கும் விதத்தில் இல்லை என்றும் வாடிக்கையாளர்கள் நினைக்க துவங்கினர்.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

இதனால் ஆல்டோ மாடலின் விற்பனையில் சிறிய தடுமாற்றம் ஏற்பட, இந்த மாடல் 30 லட்ச விற்பனை எண்ணிக்கையை அடையுமா என்பதே பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியது. ஆனால் எப்படியோ ஒரு வழியாக ஆல்டோ மாடல் 2016ல் 30 லட்சம் கார்கள் விற்பனை என்கிற மைல்கல்லை அடைந்தது.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

இதற்கு பின்னர் மாருதி சுசுகி நிறுவனம், ஓட்டுனருக்கு பக்கவாட்டில் கூடுதலாக ஒரு காற்றுப்பை, ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலக்ட்ரானிக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் (இபிடி), பின்பக்க பார்க்கிங் சென்சார், அதிவேகத்தில் சென்றால் எச்சரிக்கும் அமைப்பு மற்றும் சீட் பெல்ட்டை நினைவூட்டும் வசதி என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் 2016ல் ஆல்டோ 800 மாடலை அறிமுகப்படுத்தியது.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

ஆல்டோ 800 மாடல் மட்டுமில்லாமல் ஆல்டோ கே10 மாடலிலும் இந்த பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டன. தற்சமயம் இந்த இரு மாடல்களும் பிஎஸ்6 தரத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சோதனை ஓட்டத்திலும் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு பிஎஸ்6 என்ஜினுடன் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட ஆல்டோ கே10 காரை பற்றிய விரிவான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

இந்திய மார்க்கெட்டில் கடந்த 19 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஆல்டோ மாடல் குறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷான்க் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், ஆல்டோ கார் வாடிக்கையாளர்களில் 54 சதவீதத்தினர் முதல் முறையாக காரை வாங்குபவர்களாவர். கம்பெக்ட் டிசைன், அதிக எரிபொருள் திறன், அப்டேட்டான பாதுகாப்பு அம்சங்களால் முதன்முறையாக கார் வாங்கு நினைப்போருக்கு முதல் தேர்வாக ஆல்டோ மாடல் தான் உள்ளது என்றார்.

19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

ஆல்டோ மாடலின் இந்த 38 லட்சம் கார்கள் விற்பனை என்கிற மைல்கல்லை அடைவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. ரெனால்ட் க்விட் போன்ற போட்டி மாடல் கார்களை ஆல்டோ கார் இந்த 19 வருடத்தில் நிறைய பார்த்திருக்கும். 2020 ஏப்ரலில் அறிமுகமாகவுள்ள பிஎஸ்6-க்கு இணக்கமான ஆல்டோ கார் இந்திய சந்தையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Sells 38 Lakh Units Of The Alto In 19 Years
Story first published: Tuesday, November 26, 2019, 16:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X