மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

மாருதி சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தின்போது மாருதி சியாஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் அந்த மாடல் வந்தது.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

அப்போதே, மாருதி சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழையபடி ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் களமிறங்கியதால் ஏமாற்றம் தந்தது. எனினும், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மாருதி சியாஸ் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த புதிய மாடலுக்கு மாருதி டீலர்களில் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.5,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் சொந்த தயாரிப்பில் இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த நிலையில், மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மேலும், இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தர நிர்ணயத்திற்கு இணையானதாகவும் இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

தற்போதைய 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜ் தருவதாக அராய் தெரிவிக்கிறது. இந்த நிலையில், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதற்கு இணையாகவோ அல்லது லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் வரை தர வல்லதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக இது சாத்தியப்படுத்தும் வாய்ப்புள்ளது.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

அடுத்த ஆண்டு ஏப்ரலில்தான் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது. அதுவரை 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் சியாஸ் காரில் தொடர்ந்து வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

மாருதி சியாஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 91 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.56 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாருதி சியாஸ் காரின் புதிய 1.5 லி டீசல் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட நேரடி போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், மாருதி சியாஸ் காரின் டீசல் எஞ்சின் தொடர்ந்து குறைவான திறன் மிக்கதாகவே இருக்கிறது. எனினும், மைலேஜ் என்ற விஷயத்தை மனதில் வைத்து திறனில் மாருதி சுஸுகி நிறுவனம் சமரசம் செய்து கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ciaz 1.5 Ltr Diesel Model Bookings Open In India.
Story first published: Wednesday, February 6, 2019, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X