மாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி இரண்டு விதமான ஷோரூம்கள் வாயிலாக கார் விற்பனை செய்து வருகிறது. அரேனா என்ற ஷோரூம்களில் பட்ஜெட் மற்றும் சாதாரண ரக கார்களும், நெக்ஸா என்ற பெயரிலான ஷோரூம்களில் பிரிமீயம் வகை கார்களையும் விற்பனை செய்து வருகிறது.

மாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மாருதி வேகன் ஆர் அடிப்படையிலான அந்த மின்சார கார் தற்போது மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை!

இந்த புதிய மின்சார காரை தனது நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்வதற்கு மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக என்டிடிவி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. தற்போது நெக்ஸா ஷோரூம்களில் மாருதி இக்னிஸ், பலேனோ, சியாஸ் மற்றும் எஸ் க்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை!

இந்த நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் மின்சார மாடல் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. அதாவது, மாருதி வேகன் ஆர் மின்சார மாடலின் விலை ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை!

எனவே, அந்த பட்ஜெட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்தஸ்து, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மின்சார காரை வாங்க தூண்டும் விதமாகா இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ரூ.10 லட்சத்திற்கும் மேல் பட்ஜெட் உள்ள வாடிக்கையாளர்களை கவர்வதற்கான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

மாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை!

தற்போது நாடுமுழுவதும் 250 நெக்ஸா கார் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை 300 ஆக உயர்த்துவதற்கு மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் நெக்ஸா ஷோரூம்களை திறப்பதற்கான நடவடிக்கைகளில் மாருதி ஈடுபட்டுள்ளது.

மாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை!

எனவே, அடுத்த ஆண்டு மின்சார கார் மாடல் வரும்போது போதுமான எண்ணிக்கையிலான நெக்ஸா ஷோரூம்களை அந்நிறுவனம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடமாடும் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகவும் விற்பனையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது.

மாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை!

மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் வேகன் ஆர் காரின் அடிப்படையிலான மாடலாக இருக்கும். இந்த காரில் 72V மின் மோட்டாரும், 10 -25kWh லித்தியம் அயான் பேட்டரியும் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த கார் மின்சார மார்க்கெட்டில் புதிய அத்யாயத்தை துவங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
According to media reports, Maruti Suzuki electric cars to be retailed via Nexa premium showrooms.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X