மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

கடந்த 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகா கார் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

ஆனால், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு தக்க வைக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை தக்க வைக்க முடியாத நிலை மாருதிக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை எர்டிகா காரில் அறிமுகம் செய்தது.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

அதேநேரத்தில், வரும் மார்ச் வரையிலும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு மிக குறைவான விலை எம்பிவி கார் தேர்வாக இருந்து வந்தது. மேலும், அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு, அதிக நம்பகத்தன்மையுடன் இந்த டீசல் எஞ்சின் நன்மதிப்பை பெற்றிருந்தது.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

எனினும், தற்போது புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வானது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 95 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

மறுபுறத்தில் மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் வரும் மார்ச் மாதம் வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், டீசல் எஞ்சின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக மாருதி ஏற்கனவே அறிவித்துள்ளது.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

எனவே, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே தொடர்ந்து கிடைக்கும் என்று தெரிகிறது. பெட்ரோல் மாடலானது ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்திலும் கிடைக்கிறது. எனவே, இந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

மாருதி எர்டிகா காரில் 1.3 லிட்டர் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்!

மாருதி எர்டிகா காரின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது ரூ.7.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் ரூ.8.88 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். மாருதி எர்டிகா காரின் 1.3 லிட்டர் டீசல் மாடலைவிட 1.5 லிட்டர் டீசல் மாடலின் ஆரம்ப விலையானது ரூ.1 லட்சம் வரை கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Suzuki has discontinued Ertiga with 1.3L diesel engine option in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X