மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரில் இதுவரை 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சுஸுகி நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய புத்தம் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ ப்ளஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. ஆனால், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையைும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மாடலில் புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எர்டிகா காரின் 1.3 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 25.47 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படும் நிலையில், புதிய 1.5 லிட்டர் மாடலானது 24.20 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இதுவரை 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு ஆப்ஷன்களுமே தொடர்ந்து வழங்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது இந்த இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுமே விலக்கிக் கொள்ளப்பட இருக்கின்றன.

மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எனினும், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆதரவு இருக்கும்பட்சத்தில், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இதனால், இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அதேநேரத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டும்.

மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது எல்டிஐ, விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ ப்ளஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், எல்டிஐ வேரியண்ட்டானது ரூ.8.85 லட்சத்திலும், விடிஐ வேரியண்ட் ரூ.9.56 லட்சத்திலும், இசட்டிஐ வேரியண்ட் ரூ.10.40 லட்சத்திலும், இசட்டிஐ ப்ளஸ் வேரியண்ட் ரூ.10.91 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைத்து வருகிறது.

மாருதி எர்டிகா 1.5 லி டீசல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அதேநேரத்தில், எர்டிகா காரின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் எல்டிஐ வேரியண்ட் ஆப்ஷன் இல்லை. விடிஐ வேரியண்ட் ரூ.9.86 லட்சத்திலும், இசட்டிஐ வேரியண்ட் ரூ.10.69 லட்சத்திலும், இசட்டிஐ ப்ளஸ் வேரியண்ட் ரூ.11.20 லட்சத்திலும் கிடைக்கும். 1.3 லிட்டர் டீசல் மாடலைவிட 1.5 லிட்டர் டீசல் மாடலின் விலை ரூ.30,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ertiga 1.5L diesel launched in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X