சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

இந்திய எம்பிவி கார் சந்தையில் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் எம்பிவி கார் என்ற பெருமையை மாருதி எர்டிகா கார் தக்க வைத்து வருகிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் வடிவமைப்பிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் முற்றிலும் புதிய மாடலாக வந்தது. மேலும், இடவசதியும் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

இதனால், புதிய தலைமுறை மாருதி எர்டிகா காருக்கான வரவேற்பு சிறப்பாக இருந்து வருகிறது. ரூ.7.44 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் கிடைப்பதும் எர்டிகா காருக்கான வரவேற்பை பெரிய அளவில் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில், மாருதி எர்டிகா காருக்கான கஸ்டமைஸ் வேலைப்பாடுகளை பல நிறுவனங்கள் செய்கின்றன. இதற்காக பல லட்சங்களை வாடிக்கையாளர்கள் செலவழிக்கின்றனர். ஆனால், அது எந்தளவு சிறப்பாக இருக்கிறது என்பதை சொல்ல இயலாது.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

ஆனால், உரிமையாளர் ஒருவர் சில எளிய யோசனையில் மாருதி எர்டிகா காரை முழுமையான படுக்கை வசதி கொண்ட கேரவன் போல மாற்றி அசத்துகிறார். இதற்காக, காரில் அவர் எந்த சின்ன மாறுதலை கூட செய்யவில்லை.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை சாதாரணமான முறையில் மடக்கி வைத்துவிடுகிறார். இருக்கை இடைவெளியில் பெரிய சூட்கேஸ்களையும் வைத்து நிரப்பிவிடுகிறார். பின்னர், சிறிய மெத்தையை காரின் பின்புறம் முழுவதும் பரப்பி, படுக்கை அறையை போல மாற்றியுள்ளார். தலையணைகளையும் போட்டு, இரண்டு பெரியவர்கள் வசதியாக படுத்துச் செல்லும் அளவுக்கு அந்த இடவசதி இருக்கிறது.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

மேலும், முன்புறத்தில் ஓட்டுனர் மற்றும் பயணி ஒருவர் செல்வதற்கான வசதியும் உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும்போது என்னதான் வசதியான இருக்கை அமைப்பாக இருந்தாலும் முதுகு வலி தவிர்க்க முடியாதது. மேலும், நீண்ட தூர பயணங்களில் டிரைவிங் தெரிந்த இருவர் மாற்றி மாற்றி ஓட்டும்போது இதுபோன்ற படுக்கை வசதி இருந்தால் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியும்.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

இந்த காரில் படுக்கை வசதியாக மாற்றினாலும் கூட 4 பெரியவர்கள் வசதியாக செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஒல்லியான தேகம் கொண்டவர்களாக இருந்தால் 3 பேர் வரை படுத்துக் கொள்ள இயலும். குழந்தைகளை கூட அழைத்துச் செல்ல முடியும். எந்த செலவும் இல்லாமல், சிறிய யோசனையில் காரில் எந்த மாறுதல்களும் செய்யாமல் அவர் இதுபோன்று மாற்றிக் காட்டுகிறார்.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

ஆனால், இதுபோன்று மாற்றுவதில் இருக்கும் பெரிய ஆபத்து என்னவெனில், ஒருவேளை விபத்து ஏற்பட்டால் பின்னால் படுத்து வருபவர்களுக்கு பெரிய அளவில் காயமடையும் வாய்ப்புள்ளது. எனவே, பயணத்தின்போது வழியில் பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு இது சிறந்த யோசனையாக இருக்கும்.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

மேலும், இந்த காரில் ஏசி வென்ட்டுகள் கூரையின் மேற்புறத்தில் இருப்பதும் இதுபோன்று மாற்றும்போது எந்த பிரச்னையும் ஏற்படாது என்பது கூடுதல் விசேஷம். இதுபோன்று காரை படுக்கை வசதி கொண்டதாக மாற்றுவதற்கு சில நிமிடங்கள் போதும். அதேபோன்று, மெத்தை, தலையணைகளை பயணத்தின்போது பூட்ரூம் பகுதியில் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

புதிய மாருதி எர்டிகா கார் சிறப்பான இடவசதியை வழங்குவதோடு, இரண்டு டீசல் எஞ்சின் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

மாருதி எர்டிகா காரில் இருக்கும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

சூப்பரப்பு... சிம்பிளான ஐடியாவில் எர்டிகா காரில் ஸ்லீப்பர் வசதி... அசத்திய உரிமையாளர்!!

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.69 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.3 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 25.47 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 24.2 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று மாருதி தெரிவிக்கிறது. அதாவது, சில ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜை இந்த 7 சீட்டர் எம்பிவி கார் வழங்குவது இதன் முக்கிய பலம்.

Source: Nine M Trekker

Most Read Articles
English summary
New Maruti Suzuki Ertiga has transformed into a moving caravan with sleeping facility.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X