மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

இந்தியாவிற்கான புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் மாருதி தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே, மாருதி சுஸுகி நிறுவனம் 50 வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்களை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக வேகன் ஆர் அடிப்படையிலான மின்சார கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அதிரடி திருப்பமாக, மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

அதாவது, தனது புதிய எலெக்ட்ரிக் காருக்காக Futuro-E என்ற பெயரை மாருதி கார் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடலின் பெயரை வைத்து பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட Future S கான்செப்ட் மாடலை நினைவூட்டுவதாக இருக்கிறது. இதன் தயாரிப்பு நிலை மாடல்தான் அண்மையில் எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

இந்த நிலையில், ப்யூச்சரோ இ என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை வரும் பிப்ரவரியில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி கார் நிறுவனம் காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

அதன் அடிப்படையிலேயே, புதிய எலெக்ட்ரிக் கார் வர இருப்பதாக தெரிகிறது. அதாவது, எஸ் பிரெஸ்ஸோ காரின் மின்சார மாடலாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

புதிய ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டில் 25kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் அதே தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும் வழங்கப்படும். இந்த சார்ஜர் மூலமாக பேட்டரியை 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்வதற்கான வாய்ப்பை பெற முடியும்.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் ரூ.12 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki has filed a trademark application for new electric car concept called as Futuro-E.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X