அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரபல மாடல் கார்களின் விலைகள் அடுத்த மாதத்தில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த விலை அதிகரிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு கார்களும் அவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களுக்கு ஏற்றவாறு விலை அதிகரிப்பை பெறவுள்ளன என்று மட்டும் நிறுவனத்தின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் வெறும் ரூ.2.89 லட்சம் மட்டுமே விலை கொண்ட ஆல்டோ மாடலில் இருந்து ரூ.11.47 லட்சம் வரை விலை கொண்ட எக்ஸ்எல்6 மாடலை வரை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலைகளாகும்.

அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

இந்த விலைகள் அனைத்தும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களை சார்ந்தது என்று ஏற்கனவே மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்திருந்தது. இதே கொள்கையை தான் அடுத்த மாதம் முதல் அனைத்து மாடல்களிலும் கொண்டுவரப்படவுள்ள விலை அதிகரிப்பிலும் பயன்படுத்தவுள்ளது.

அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

சமீபத்தில் வெளிவந்த நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரத்தில், மாருதி சுசுகி நிறுவனம் 1.44 லட்சம் கார்களை கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1.46 லட்சம் விற்பனையான 2018 நவம்பர் மாதத்தை விட 1.6% குறைவாகும். வெளிநாட்டு சந்தை விற்பனையையும் சேர்த்து பார்த்தால், கடந்த மாதத்தில் 1.51 லட்சம் மாருதி சுசுகி கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 2018 நவம்பரை விட 1.9% குறைவாகும்.

அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

மாருதி சுசுகி நிறுவனம் மட்டுமின்றி டாடா, ஹோண்டா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் கடந்த மாதத்தில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சில நிறுவனங்கள் விற்பனையில் முன்னேற்றத்தையும் கண்டுள்ளன. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

2019 ஜூலை- செப்டம்பர் இடையிலான காலாண்டில் மாருதி நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.1,359 கோடியாகும். அதுவே 2018ஆம் ஆண்டு இதே காலாண்டில் ரூ.2,240 கோடி இலாபத்தை ஈட்டியிருந்தது. இதன்மூலம் 39 சதவீத இலாப வீழ்ச்சியை மாருதி நிறுவனம் இந்த காலாண்டில் அடைந்துள்ளது தெரிய வருகிறது.

அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதத்திலும் மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை அதிகரித்து இருந்தது. ஆனால் இந்த விலை அதிகரிப்பு பெரிய அளவில் இல்லை. அனைத்து மாடல்களின் விலைகளிலும் வெறும் 689 ரூபாயை மட்டும் அதிகரித்து இருந்தது. இந்திய அரசாங்கம் கொண்டுவந்த புதிய நம்பர் ப்ளேட் சிஸ்டம் தான் இந்த சிறிய விலை அதிகரிப்பிற்கு காரணம்.

அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

1983ஆம் ஆண்டு மாருதி 800 மாடலின் விற்பனையின் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காலடி எடுத்து வைத்த இந்நிறுவனம் கடந்த 37 வருடங்களில் சுமார் 20 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

மாருதி சுசுகி நிறுவனத்தின் விலை அதிகரிப்பிற்கு பிஎஸ்6 மாற்றம் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும், ஆட்டோமொபைல் துறையில் நிலவிவரும் மந்த நிலையால் இந்நிறுவனத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டமும் ஒரு காரணமே. ஒவ்வொரு காரின் விலையும் எவ்வளவு அதிகரிக்கப்படவுள்ளது என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Prices Hike In India: All Models To Receive An Increase In Price From January 2020
Story first published: Tuesday, December 3, 2019, 18:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X