அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

கடந்த ஆகஸ்ட் மாதமும் மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத மந்த நிலையால் பெரும் பின்னடவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கார் நிறுவனங்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி நாட்டின் கார் விற்பனையில் கிட்டத்தட்ட பாதியளவு சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கிறது.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

அந்நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜனவரி மாதம் முதலே சரிந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட்டிலும் அதே நிலை தொடர்ந்துள்ளது. ஆம். கடந்த மாதம் அந்நிறுவனத்தின் கார் விற்பனை 33 சதவீதம் குறைந்துவிட்டது.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,58,189 கார்களை விற்பனை செய்திருந்த அந்நிறுவனம், கடந்த மாதம் 1,06,413 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதனால், அந்த நிறுவனம் பெரும் வர்த்தக இழப்பை சந்தித்துள்ளது.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

உள்நாட்டு விற்பனையும் கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 1,45,895 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்திருந்த அந்நிறுவனம், கடந்த மாதம் 93,173 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 36 சதவீதம் குறைவாகும்.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

ஏற்றுமதியை வைத்து சில நிறுவனங்கள் சரிவை சமாளித்து வருகின்றன. ஆனால், மாருதிக்கு ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மாருதியின் கார் ஏற்றுமதி 10.8 சதவீதம் சரிந்துவிட்டது.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

கடந்த 2018ம் ஆண்டு 10,489 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கார் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9,352 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

மாருதியின் ஆல்ட்டோ உள்ளிட்ட மிகச் சிறிய வகை கார்களின் விற்பனை 55 சதவீதம் வரையிலும், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் கார்கள் அடங்கிய காம்பேக்ட் ரக கார்கள் செக்மென்ட்டில் 16 சதவீதமும் குறைந்துவிட்டது.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

மாருதி சியாஸ் கார் அடங்கிய மிட்சைஸ் செக்மென்ட்டில் 28 சதவீதம் வரையிலும், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா அடங்கிய யுட்டிலிட்டி ரக கார்கள் செக்மென்ட்டில் விற்பனை 14 சதவீதம் வரையிலும் குறைந்துள்ளது.

அடி மேல் அடி... மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் இடி!

பண்டிகை காலத்தின் துவக்கப்புள்ளியாக கருதப்படும் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் கார் விற்பனையில் ஏற்றம் பெறும் என்ற பெரும் நம்பிக்கையுடன் மாருதி உள்ளிட்ட அனைத்து கார் நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

Most Read Articles
English summary
Maruti Suzuki India has reported of its car sales drops to near 33% in August 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X