அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா..?

மாருதி சுஸுகி நிறுவனம், குறிப்பிட்ட கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட வேகன்ஆர் கார்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

இந்தியாவில் உள்ள பிரபல வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி உள்ளது. இது, பட்ஜெட் ரக வாகன தயாரிப்பில் பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது.

இதன்காரணமாக, இந்தியாவில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு நிலவி வருகின்றது. அந்தவகையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிக முக்கியமான மாடல்களில் ஒன்றாக வேகன்ஆர் கார் இருக்கின்றது. இந்த கார் மலிவு விலையில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம், 40 ஆயிரத்து 618 யூனிட் வேகன் ஆர் கார்களை சர்வீஸ் மையங்களுக்கு திரும்பிக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம், 1 லிட்டர் வேகன்ஆர் கார்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

அதிலும், குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதியில் இருந்து 2019 ஆகஸ்டு 12ம் தேதி ஆகிய நாட்களுக்கு இடைபட்ட கால கட்டத்தில் தயார் செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே அந்நிறுவனம் அழைத்துள்ளது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

இந்த வேகன் ஆர் கார்களில் உள்ள ப்யூவல் ஹோஸ், மெட்டர் கிளாம்புடன் மோதலைச் சந்திப்பதன் காரணமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம், புதிய தலைமுறை வேகன்ஆர் மாடலை கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த கார் 1 மற்றும் 1.2 லிட்டர் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

அதே சமயம், வேகன்ஆர் காரின் முந்தைய மாடலும் தற்போது வரை வாடகை கார் துறைக்காக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதில், பழைய வேகன்ஆர் 1 லிட்டர் எஞ்ஜினும் அடங்கும். ஆகையால், தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மாடல்களில் பழையவை மற்றும் புதியவையும் அடங்குகின்றது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

வேகன்ஆர் கார் சந்தித்தித்து இருக்கும் இப்பிரச்னை தொடர்ச்சியாக அதன் உரிமையாளர்கள் அளித்த புகாரின் காரணமாக, அதனை சீர் செய்யும் பணியில் மாருதி சுஸுகி களமிறங்கியுள்ளது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

சர்வீஸுற்கு தகுதியான கார்கள் குறித்த தகவலை, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகார்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உள்நிழைந்து வாகனத்தின் சேஸிஸ் எண்ணை உள்ளிட்டால், நம்முடைய வேகன்ஆர் இதற்கு தகுதியானதா என்ற தகவல் கிடைத்துவிடும்.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் முன்னணியில் இருக்கும் வேகன்ஆர், இந்தியாவிலும் அதிகம் விற்பனயாகும் கார்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த காரை முதல்முறையாக அந்நிறுவனம், கடந்த 1999ம் ஆண்டு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

அன்றிலிருந்து, தற்போது வரை இக்கார் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதற்கு, இந்த காரில் இருக்கும் மிகச் சிறப்பான இடவசதியும், சொகுசு வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

மாருதி வேகன்ஆர் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினில் கிடைக்கின்றது. இந்த தரத்தில் வேகன்ஆர் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இதே திறனில்தான் ஸ்விஃப்ட் காரும் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் 82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இதில், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்கின்றது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

இத்துடன், வேகன் ஆர் காரில் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வும் கிடைக்கின்றது. இது, 67 எச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது.

அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா...?

இந்த வேகன்ஆர் கார் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிலும் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கின்றது. இது, கடந்த ஜூலை மட்டும் 15,062 யூனிட்டுகளை விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாத விற்பனையைக் காட்டிலும் 5 சதவீத வளர்ச்சியாகும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Recalls 40k WagonR. Read In Tamil.
Story first published: Saturday, August 24, 2019, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X