ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாட்டின் ஜாம்பவான வாகன உற்பத்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இந்திய ஆட்டோமொபைல்துறை நடப்பு ஆண்டு தொடங்கிய முதல் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் விற்பனை வீழ்ச்சி மற்றும் நிதியிழைப்பைச் சந்தித்து வருகின்றது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இந்திய வாகனத்துறையின் இத்தகைய நிலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தவகையில் பண மதிப்பிழப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியிருந்தார். அப்போது, "ஓலா மற்றும் ஊபர் ஆகியவற்றின் அதிக புழக்கத்தின் காரணமாக இந்திய வாகனத்துறை மந்த நிலையைச் சந்தித்து வருவதாக கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், இளைஞர்கள் இஎம்ஐ செலுத்தி வாகனத்தை வாங்குவதற்கு பதிலாக பொதுவாகனங்களைப் பயன்படுத்துவதன் காரணமாகவும் இத்தகைய சூழல் நிலவி வருகின்றது என்று கூறியிருந்தார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

அமைச்சரின் இந்த பதில் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆகையால், இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் இந்திய இயக்குநர் சஷாங் ஸ்ரீவஸ்தா பதிலளித்துள்ளார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

அதில், "ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அப்போது, இந்த மந்த நிலை இந்தியாவில் நிலவவில்லை. அதேசமயம், தற்போதைய விற்பனைச் சரிவு கடந்த 2018ம் ஆண்டு இறுதியின்போதே தொடங்கியது. இதன் வீரியம் நடப்பு ஆண்டு முதலே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது" என்றார்.

MOST RED: தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

மேலும் பேசிய அவர், "ஓலா மற்றும் ஊபர் இந்தியாவில் கால் தடம் பதித்தபோது, பெரும்பாலான இளைஞர்கள் அதில் இணைந்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினார். எனவே, அப்போது இந்திய வாகனத்துறை நல்ல வளர்ச்சியை அடைந்தது" என தெரிவித்தார்.

MOST READ: கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

தொடர்ந்து ஓலா, ஊபர் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே தற்போதைய இந்தியா வாகனத்துறையின் மந்தமான நிலைக்கு காரணம் என்று முழுமையாக கூறிவிட முடியாது. இதனை நாம் ஆராய்ந்து பார்த்துவிட்டுதான் கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

MOST READ: "எனக்கு எந்த பிரச்னையும் இல்ல" ஓபனாக பேசிய அமைச்சர் நிதின் கட்கரி: எதற்கு தெரியுமா..?

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ள இந்த கருத்து வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதுவரை காணாத அளவிலான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, தற்காலிக பணியாளர்களை வெளியேற்றுதல், உற்பத்தியைக் குறைத்தல் உள்ளிட்ட பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

அதேசமயம், அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் போலவே, மாநிலத்தின் துணை முதலமைச்சரும் இதேபோன்று ஓர் வியத்தகு பதிலை பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவர், விபத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது சீராக இருக்கும் சாலைகள்தான் என்ற பதிலை கூறியுள்ளார். இந்த பதிலுக்கான சொந்தக்காரர் யார் எதற்காக இப்படியொரு பதிலை கூறினார் என்பதற்கான தகவலை கீழே காணலாம்...

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருக்கவே செய்தது. ஆனால் அபராதங்கள் மிக கடுமையானது என்பதால், பின்னர் வந்த நாட்களில், அதிகப்படியான எதிர்ப்பு எழ தொடங்கியது. அத்துடன் வாகன ஓட்டிகளிடம் போலீசார் காட்டிய கெடுபிடிகளும் எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்து விட்டது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

அபராத தொகைகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக கூறி விட்டார். இவரது தீவிர முயற்சியால்தான் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

மத்திய அரசு கை விரித்து விட்ட நிலையில், அபராத தொகைகளை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ஆரம்பத்தில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் அபராத தொகையை கடுமையாக உயர்த்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் இந்த மாநிலங்களுடன் பாஜக ஆளும் குஜராத்தும் இணைந்தது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

குஜராத் மாநிலத்தில் தற்போது அபராத தொகைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. குஜராத் பாணியில் மேலும் சில மாநிலங்களிலும் அபராத தொகைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தமிழகமும் ஒன்று. அபராத தொகைகளை குறைப்பது தொடர்பாக தமிழக அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இந்த வரிசையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவிலும் அபராத தொகை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அபராத தொகைகளை குறைப்பது தொடர்பாக ஆராயும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா நேற்று (செப்டம்பர் 11) தெரிவித்தார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

அதே நேரத்தில் குஜராத் மாநில அரசால் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற கர்நாடகா முயன்று வருவதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர்களில் ஒருவரான லக்ஸ்மன் சவடி கூறியுள்ளார். கர்நாடக மாநில அரசின் போக்குவரத்து துறையை லக்ஸ்மன் சவடிதான் கவனித்து கொண்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இதுகுறித்து லக்ஷ்மன் சவடி கூறுகையில், ''அபராதம் என்ற பெயரில் சாமானிய மக்களின் தலையில் சுமை ஏற்றக்கூடாது. எனவே தேவையான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்'' என்றார். கடந்த செப்டம்பர் 4 முதல் 9ம் தேதி வரை மட்டும் பெங்களூர் போக்குவரத்து போலீசார் அபராதமாக 72.49 லட்ச ரூபாயை வசூலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இதனிடையே அபராத தொகையை உயர்த்தியிருப்பதால், சாலைகளை தரமாக அமைத்து தரும்படி அரசிடம் வாகன ஓட்டிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். சாலைகளை முதலில் தரமாக அமைத்து விட்டு அதன்பின் இதுபோல் கடுமையான அபராதங்களை வசூல் செய்யுங்கள் எனவும் வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

வாகன ஓட்டிகளின் இந்த கோரிக்கை தொடர்பாக கர்நாடகாவின் மற்றொரு துணை முதல்வரான கோவிந்த் கர்ஜோலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு கோவிந்த் கர்ஜோல் அளித்துள்ள பதில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ''நல்ல சாலைகள்தான் அதிகமான விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன. மோசமான சாலைகள் அல்ல'' என்பதுதான் கோவிந்த் கர்ஜோல் அளித்த பதில்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இதுகுறித்து கோவிந்த் கர்ஜோல் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்தில் 10 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மோசமான சாலைகள்தான் காரணம் என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இதை நான் இல்லை என்கிறேன். உண்மையில் நல்ல சாலைகள்தான் காரணம்'' என்றார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

தரமான சாலைகள் வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வரும் கர்நாடக துணை முதல்வரின் இந்த பேட்டி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. கர்நாடக துணை முதல்வரின் இந்த பேட்டி தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maruti Suzuki Replies For Nirmala Sitharaman Quotes. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more