எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கான காரணம் குறித்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் ஒரு வழியாக தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் தங்கள் எலெக்ட்ரிக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வரும் மாதங்களில் எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, நிஸான் லீஃப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு களமிறங்கவுள்ளன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் இந்த ரேஸில் உள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான வேகன் ஆர் எலெக்ட்ரிக், வரும் 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 50 யூனிட்களுடன் இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்ஸவா இந்த முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளார்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

புத்தம் புதிய வேகன் ஆர் கார் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-பெட்ரோல் என இரட்டை எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. அத்துடன் வரும் மாதங்களில், வேகன் ஆர் காரின் எல்பிஜி வேரியண்ட்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த சூழலில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு டிமாண்ட் எப்படி இருக்கும் என திட்டமிட்டுள்ளீர்கள்? என்ற கேள்விக்கு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்ஸவா, சிஎன்பிசி டிவி18-யிடம் பின்வருமாறு கூறினார். ''2020ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வோம்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

தற்போது எங்களிடம் அத்தகைய 50 வாகனங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறான நிலப்பரப்புகளில் அவை சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் எவ்வாறு இருக்கும் என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் பேட்டரியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

காரின் விலையில் 50-60 சதவீதம் பேட்டரிக்கே சென்று விடும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே டிமாண்ட் எப்படி இருக்கும்? என்பது அவ்வளவு உறுதியாக தெரியவில்லை. இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது பேட்டரி விலை அதிகமாக இருப்பதால், 10 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருந்தாலும் கூட இருக்கலாம். மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 150 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

எனவே இது நகர பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். நகரங்களில் கார்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் கேப் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இந்த ரேஞ்ச் போதுமானதுதான். காரை சார்ஜ் செய்வதற்கு இவர்களுக்கு போதுமான அவகாசம் இருக்கும். ஆனால் தனி நபர்கள் மற்றும் கேப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை பெரிய அளவில் ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பது ரேஞ்ச்தான்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

எலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக ஒரு சார்ஜிற்கு 250-300 கிலோ மீட்டர்கள் ரேஞ்சை வழங்கினால் மட்டுமே தனி நபர்கள் மற்றும் கேப் நிறுவனங்களால் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படும். இதனிடையே இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான 1,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த எண்ணிக்கை வெகு விரைவில் 3,000 ஆக உயர்த்தப்படும்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு, எலெக்ட்ரிக் வாகன கடனுக்கான வட்டிக்கு வருமான வரி சலுகை என அவற்றை அடுக்கி கொண்டே போகலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும். எனவே வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki's First Electric Car: WagonR EV India Launch Details. Read in Tamil
Story first published: Thursday, July 18, 2019, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X