மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது!

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் உருவாக்கி இருக்கும் மைக்ரோ ரக எஸ்யூவி மாடல் எஸ் பிரெஸ்ஸோ. இந்த புத்தம் புதிய பட்ஜெட் கார் மாடல் வரும் 30ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் என்பதும் தெரிந்துவிட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்தது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது!

ஆனால், இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்ற தகவல் சந்தேகத்துடனே பகிரப்பட்டு வந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களின்படி, மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது, ஸ்டான்டர்டு ஆப்ஷனல், எல்எக்ஸ்ஐ, எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல், விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஆப்ஷனல், விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய 6 வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது!

மறுபுறத்தில் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் வகை கியர்பாக்ஸ் மாடலானது விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ், விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் ஏஜிஎஸ், மற்றும் விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஏஜிஎஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் 3,665 மிமீ நீளமும், 1,520 மிமீ அகலமும், 1,549 மிமீ உயரமும் பெற்றுள்ளது. இதன் வீல் பேஸ் 2,380 மிமீ ஆக உள்ளது. இந்த கார் 1,170 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 13 அங்குல மற்றும் 14 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.3.5 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ க்விட், டாடா டியோகோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Image Soruce: Team BHP

Most Read Articles
English summary
The entire specification details of the Maruti Suzuki S-Presso has been leaked ahead of its official launch on September 30th.
Story first published: Friday, September 20, 2019, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X