கருப்பு & சிவப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

மாருதி சுசுகி நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் எஸ்-பிரெஸ்ஸோ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த கார் தற்போது கருப்பு, சிவப்பு என்ற இரு நிறங்களில் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

மினி எஸ்யூவியாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ மாடல், எஸ்யூவி காரை விரும்புவோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மிக குறுகிய காலத்திலேயே சிறப்பான முறையில் விற்பனையாகும் கார்களின் லிஸ்ட்டில் 10 இடங்களுள் நுழைந்த எஸ்-பிரெஸ்ஸோவிற்கு கஸ்டமைசேஷன் தேர்வுகளையும் மாருதி நிறுவனம் வழங்குகிறது.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

அந்த வகையில் ஸ்போர்ட்டியாக ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் இந்த கார் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை பிஎம்சி எச்டி வீடியோஸ் என்ற யூடியூப் சேனல் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ, கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ காரின் உட்புறத்தில் இருந்து ஆரம்பமாகிறது.

உட்புறத்தில், ஏசியின் காற்று வெளிவரும் வெண்ட்ஸ்களின் மேற்புறத்திலும், ஸ்பீடோமீட்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற தொழிற்நுட்பங்களை சுற்றிலும் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி உட்புறத்தில் உள்ள மற்ற பாகங்கள் ஏற்கனவே சில்வர் நிறத்தில் உள்ளதால், வேறெந்த மாற்றமும் கொடுக்கப்படவில்லை.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

வெளிப்புறத்தில், மிக பெரிய மாற்றமாக ரூஃப் மற்றும் ரூஃப்-ஐ காருடன் இணைக்கும் நான்கு பில்லர்களுக்கும் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறம் முழுவதும் சிவப்பு நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளதால் ரூஃப்-ன் கருப்பு நிறம் தனித்து தெரிகிறது. பெயிண்ட் மாற்றம் மட்டுமில்லாமல் அலாய் சக்கரங்களும் கருப்பு மற்றும் சில்வர் என ட்யூல்-டோனிற்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

சில்வர் நிறம் கூடுதலாக முன்புற க்ரிலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற ஸ்பாய்லர் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான தோற்றத்திற்காக முன்புற பம்பரில் எந்த வேலைப்பாடும் நடைபெறவில்லை. அப்படியே கருப்பு நிறத்தில் தான் தொடர்ந்துள்ளது.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

பிரபலமான மற்ற மாருதி கார்களை போல் ஹெர்ட்டெக் ப்ளாட்ஃபாரத்தில் எஸ்-பிரெஸ்ஸோ தயாரிக்கப்பட்டு வருகிறது. மாருதி நிறுவனத்தின் எடை குறைந்த காராக விளங்கும் எஸ்-பிரெஸ்ஸாவின் தயாரிப்பில், எடையை குறைக்க அதிக இழுவிசை மற்றும் எடை குறைவான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

இந்த மினி எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டுள்ள 3 சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் 67 பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

மேலும் எஸ்-பிரெஸ்ஸோ கார் அடுத்த ஆண்டில் பிஎஸ்6 தரத்திலும் சிஎன்ஜி வெர்சனிலும் அறிமுகமாகவுள்ளது. இந்த கார் மட்டுமின்றி தனது பிரபல கார்கள் அனைத்தையும் பிஎஸ்6 தரத்திற்கு மாருதி சுசுகி நிறுவனம் மாற்றி வருகிறது. இதனால் மாருதி பிஎஸ்6 கார்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பொது சாலையில் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

அந்த வகையில் சமீபத்தில் விட்டாரா பிரெஸ்ஸாவின் பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

சிவப்பு & கருப்பு நிறத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ... வீடியோவும் வெளியீடு

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காருக்கு இந்திய சந்தையில் முக்கியமான போட்டி மாடலாக ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கார் உள்ளது. இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியவுடன் எஸ்-பிரெஸ்ஸோவின் எலக்ட்ரிக் வெர்சனையும் அறிமுகப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: BMC HD Videos/YouTube

Most Read Articles
English summary
Maruti Suzuki S-Presso dual tone video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X