Just In
- 7 hrs ago
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- 9 hrs ago
கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்
- 9 hrs ago
ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...
- 9 hrs ago
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி!
Don't Miss!
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- News
என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி
- Technology
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் அசத்திய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!
கடந்த மாதம் விற்பனையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் அசத்தி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த செப்டம்பர் 30ந் தேதி மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மிக குறைவான பட்ஜெட்டில் மினி எஸ்யூவி ஸ்டைலில் வந்த இந்த மாடலுக்கு முதல் மாதத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 5,628 எஸ் பிரெஸ்ஸோ கார்களை விற்பனை செய்ததாக மாருதி தெரிவித்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் விற்பனை சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதாவது, அக்டோபரில் மொத்தம் 10,634 எஸ் பிரெஸ்ஸோ கார்களை மாருதி கார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

செப்டம்பர் இறுதி தேதியில் வந்ததால், கடந்த மாதம்தான் முழு முதல் மாதமாக கணக்கில் வைத்துக் கொண்டால், விற்பனை 10,000 என்ற சாதனை எண்ணிக்கைய தாண்டியிருப்பதுடன், விற்பனையில் இந்தியாவின் டாப்- 10 கார் பட்டியலிலும் இணைந்துள்ளது. கடந்த மாதம் 8வது இடத்தில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் பிடித்து அசத்தி இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் இந்தளவுக்கு வரவேற்பை பெற்றதற்கு பல காரணங்களை கூறலாம். ரூ.3.69 லட்சம் என்ற மிக குறைவான விலையில் இந்த கார் எஸ்யூவி ஸ்டைலில் வந்தததுதான் முக்கிய காரணமாக கூறலாம். இது ரெனோ க்விட் காருக்கு நேரடி போட்டியாகவும், பட்ஜெட் அடிப்படையில் டாடா டியாகோவுக்கும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயனஅபடுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 67 எச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ், 12வி பவர் சாக்கெட் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒப்பான அம்சங்ளையும் இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், அதிவேகம் குறித்த எச்சரிக்கை வசதி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. விஎக்ஸ்ஐ ப்ளஸ் வேரியண்ட்டில் முன்புற பயணிக்கான ஏர்பேக் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது.

மாருதி எதிர்பார்த்தபடியே, எஸ் பிரெஸ்ஸோ கார் கடந்த மாதம் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கி கைகொடுத்துள்ளது. பல மாதங்களாக விற்பனை குறைவால் தத்தளித்து வந்த மாருதிக்கு கடந்த மாதம் ஆறுதல் தரும் வகையில் அமைந்தது.

மாருதி கார்களின் கட்டுமானம், பாதுகாப்பு குறித்த ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. இது புதிய எஸ் பிரெஸ்ஸோ கார் மூலமாக மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.