ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் மாருதி புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

கடந்த பல தசாப்தங்களாகவே ஆட்டோமேட்டிக் கார்கள் என்றால் இந்தியர்களுக்கு அலர்ஜி. அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்கமாட்டார்கள். மேனுவல் கியர்பாக்ஸ் காரை ஒப்பிடுகையில் அதிக விலை, குறைவான மைலேஜ் மற்றும் சிக்கலான தொழில்நுட்பத்தால் அதிக பராமரிப்பு செலவு வைத்து விடும் என்ற காரணங்கள்தான் ஆட்டோமேட்டிக் கார்களை ஒதுக்க வைத்தது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

ஆனால், மாருதி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஆட்டோமேட்டிக் கார் சந்தையும் ஒரு சான்றாக மாறி இருக்கிறது. இந்திய கார் வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை சரியாக புரிந்து கொண்டு யுக்திகளை வகுப்பதில் மாருதி கில்லி. அத்துடன், நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசலில் தினசரி ஓட்டுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் வழங்க முடிவு செய்தது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

அந்த வகையில், இந்தியர்களுக்கு தோதுவான ஆட்டோமேட்டிக் கார்களை களமிறக்க முடிவு செய்தது. அதன்படி, ஃபார்முலா-1 கார்களில் பயன்படுத்தப்படும் ஏஎம்டி எனப்படும் புதிய வகை கியர்பாக்ஸ் மாடலை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்ய திட்டமிட்டது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தனது புத்தம் புதிய செலிரியோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலை மாருதி அறிமுகப்படுத்தியது. ஏஜிஎஸ் என்ற பெயரில் மாருதி கொண்டு வந்த இந்த புதிய ஆட்டோமேட்ட்டிக் கியர்பாக்ஸ் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அந்நிறுவனத்தின் பல பட்ஜெட் கார்களில் இந்த கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை விட சற்றே கூடுதல் விலை, இணையான மைலேஜ் மற்றும் எளிமையான தொழில்நுட்பத்தை பெற்றிருப்பதுடன், குறைவான பராமரிப்பு செலவு போன்ற விஷயங்கள் வாடிக்கையாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கத் தூண்டியது.

MOST READ: திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

இதனால், இந்திய ஆட்டோமேட்டிக் கார் மார்க்கெட்டில் ஏஎம்டி மூலமாக புதிய பாதையை மாருதி கார் நிறுவனம் வகுத்துக் கொடுத்தது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்திற்கும் மேல் ஏஎம்டி கார்களை விற்பனை செய்து மாருதி புதிய வரலாறு படைத்துள்ளது.

MOST READ: அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

பட்ஜெட் கார் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் சில கார்களில் சாதாரண வகை ஆட்டோமேட்டிக் மற்றும் சிவிடி வகை ஆட்டோமேட்டிக் கார்களையும் மாருதி வழங்குகிறது. இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது மாருதி.

MOST READ: புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு.. இதற்காகதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

கடந்த நிதி ஆண்டில் மாருதி கார் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் ஆட்டோமேட்டிக் கார்களின் பங்களிப்பு என்பது 2 லட்சத்திற்கும் அதிகமாகன எண்ணிக்கையை தொட்டு, 11.6 சதவீதமாக இருந்தது. மாருதியை பின்பற்றி பல முன்னணி கார் நிறுவனங்களும் ஏஎம்டி கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has reached a new milestone by selling over 6,00,000 automatic cars, of which 5 lakh cars were equipped with AMT Gearbox technology.
Story first published: Monday, December 16, 2019, 17:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X