மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

இந்தியாவின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகியின் செப்டம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

கடந்த மாத விற்பனை புள்ளிவிபரங்களின்படி, மாருதி சுசுகியின் விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட இந்த ஆண்டு செப்டம்பரில் 27 சதவீதம் வீழ்ச்சியடைந்தது தெரியவந்துள்ளது.

மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

கடந்த ஆண்டு செப்டம்பரில் 151,512 யூனிட்கள் விற்பனையான மாருதி சுசுகியின் கார்கள், கடந்த செப்டம்பரில் 110,454 யூனிட்கள் தான் விற்பனையாகியுள்ளன. ஆனால்,இது 93,173 யூனிட்கள் என்ற அளவில் விற்பனையான கடந்த ஆகஸ்ட் மாதத்தின் விற்பனையை விட 18.55 சதவீதம் கூடுதல் என்பது ஆறுதலான விஷயம்.

மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

மேலும் மாருதி சுசுகி நிறுவனம் மிட்-சைஸ் வகை கார்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதத்தில் 20,085 யூனிட்கள் இந்நிறுவனத்தின் மிட்-சைஸ் கார்கள் விற்பனையாகி 42.6 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. பொதுவாக மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ போன்ற சிறிய வகை கார்களுக்கு தான் பிரபலமானதாக கடந்த 15 ஆண்டுகளாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

மாருதி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எஸ்-பிரெஸ்ஸோ என்ற மிட்-சைஸ் காரை இந்த மாதத்தில் தான் அறிமுகப்படுத்தியுள்ளதால் இதன் விற்பனை இந்த கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.

மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

மிட்-சைஸ் கார்கள் மட்டுமல்லாமல் மாருதி சுசுகியின் பிரசித்திப்பெற்ற நியூ வேகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், டிசைர் மற்றும் பலேனோ முதலிய கார்களும் கடந்த மாதத்தில் 77,264 யூனிட்கள் விற்பனையாகின. இதுவும் 29 சதவீத வீழ்ச்சியை பெற்றுள்ளன. மிட்-சைஸ் வகை கார் செடான் சியாஸும் 1,715 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி 72 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை அடைந்துள்ளது.

மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

பெரிய அளவில் வீழ்ச்சியை அடையாத கார்கள் என்றால், அவை புது மாடல்களாக அறிமுகமான எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 மட்டுமே. 21,526 யூனிட்கள் விற்பனையான இவைதான் மிக குறைவான வீழ்ச்சி கண்டுள்ளன. இந்த கார்களின் விற்பனை 0.5 சதவீதம் மட்டுமே வீழ்ச்சி கண்டது.

மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

மாருதி சுசுகியின் வேன்களும் விற்பனையில் 32% வீழ்ச்சியடைந்துள்ளன. இவை கடந்த செப்டம்பர் மாதத்தில் 9,949 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளன. மாருதியின் வர்த்தக வாகனமான சூப்பர் கேரியும் தனது பங்கிற்கு விற்பனையில் 0.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2,046 யூனிட் சூப்பர் கேரி வாகனங்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன.

மாருதி சுசுகி கார் விற்பனை 27 சதவீதம் வீழ்ச்சி!

ஜிஎஸ்டி பிரச்சனையால் கடந்த 10 மாதத்திற்கும் மேலாக ஆட்டோமொபைல்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதில் மாருதி சுசுகி நிறுவனம் மட்டும் என்ன விதிவிலக்கா... இதனால் கடந்த மாதம் 20ஆம் தேதி கூட்டப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கார்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை.

Most Read Articles
English summary
India's largest carmaker mruthi suzuki reported that 27 percent of decline passenger vehicle sales in september 2019.
Story first published: Tuesday, October 1, 2019, 17:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X