மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....

மாருதி சுசுகி நிறுவனம் தனது தயாரிப்புகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்காக பனிகாலத்திற்கான சர்வீஸ் கேம்ப்பை சமீபத்தில் ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் வரையில் நடைபெற இருக்கும் இந்த கேம்ப் கிறித்துமஸ் விடுமுறைக்கு முன்பாக நிறைவடையும் என இந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....

அதாவது டிசம்பர் 20ஆம் தேதி வரை மாருதி சுசுகி நிறுவனத்தால் நடத்தப்பட உள்ள இந்த சர்வீஸ் கேம்பில் அதிக தள்ளுபடி மற்றும் குறைவான பணியாளர் செலவில் வாகனங்களின் 27 பாயிண்ட் சரிபார்ப்பு, ட்ரை வாஷ்/ டாப் வாஷ் உள்ளிட்டவை செய்து தரப்பட்டு வருகிறது.

மாருதி உரிமையாளர்களுக்கு இன்பச் செய்தி

இதுமட்டுமில்லாமல் காரின் பாகங்களும் தள்ளுபடி மற்றும் சலுகையுடன் இந்த கேம்பில் விற்கப்படுகிறது. தற்சமயம் இந்த சர்வீஸ் கேம்ப்பை இந்தியா முழுவதும் தனது சர்வீஸ் சென்டர்களில் நடத்தி வரும் மாருதி சுசுகி நிறுவனம், இந்த கேம்ப்பை கடந்த 11ஆம் தேதி ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

மாருதி உரிமையாளர்களுக்கு இன்பச் செய்தி

எங்களது வாடிக்கையாளர்கள் வாகனத்தில் எந்தவொரு பிரச்சனையும் இன்றி இந்த பனிக்காலத்தையும் விரைவில் வர போகின்ற கிறித்துமஸ் விடுமுறையையும் கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் சலுகை மற்றும் தள்ளுபடிகளுடன் இந்த சர்வீஸ் கேம்ப் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மாருதி சுசுகி நிறுவனம் கூறுகிறது.

மாருதி உரிமையாளர்களுக்கு இன்பச் செய்தி

இவர்களது இந்த கூற்றும் ஏற்கும்படியாக தான் உள்ளது. ஏனெனில் மற்ற நேரங்களில் கார் ப்ரேக்-டவுன் ஆகி சாலையில் நின்றாலே கோபம் தலைக்கேறிவிடும். பனிக்காலத்தில் சொல்லவா வேண்டும். இதனால் தான் இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தியினை தெரிவித்து வருகிறது.

மாருதி உரிமையாளர்களுக்கு இன்பச் செய்தி

இந்த சர்வீஸ் கேம்பின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களின் பாகங்களின் நிலையை எந்தவொரு செலவும் இன்றி பரிசோதித்து தெரிந்து கொள்ளவும் முடியும். இந்த சர்வீஸ் கேம்ப் அறிவிப்பு ஒருபுறம் இருக்க, மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து என்சிஏபி (நியூ கார் அஸஸ்மெண்ட் புரோகிராம்) அமைப்பிற்கு பாதுகாப்பு சான்றிதழிற்காக அனுப்பப்பட்ட மாருதி எர்டிகா கார் மூன்று ஸ்டாரை பெற்றுள்ளது.

மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....

இந்த அமைப்பு எர்டிகாவின் ட்யூல் காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, சீட் பெல்ட் அலாரம், ஓட்டுனருக்கென ப்ரேத்யகமாக கொடுக்கப்படும் சீட் பெல்ட், பயணிகளுக்கான பக்கவாட்டு காற்றுப்பைகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் ஆங்கரேஜ்ஜஸ் போன்ற அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் சரிபார்த்து விட்டு இந்த மூன்று ஸ்டார் மதிப்பை வழங்கியுள்ளது.

மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....

ஐந்து-கதவு, ஏழு-இருக்கைக்கான எம்பிவி வகையில் இடம்பெற்றுள்ள மாருதி எர்டிகா மாடல் கார் க்ராஷ் சோதனையில் 1,363 கிலோகிராம் எடை (டம்மிகளையும் சேர்த்து) கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 64kmph வேகத்தில் எர்டிகா கார் இந்த க்ராஷ் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....

மாருதி சுசுகி கார்களின் உரிமையாளர்களுக்கு மாருதியின் இந்த அறிவிப்பு நிச்சயம் இன்ப செய்தி தான். இதுமட்டுமில்லாமல் இந்த அறிவிப்பு மற்ற வாடிக்கையாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தால் இனிவரும் மாதங்களில் மாருதி கார்களின் விற்பனையில் மாற்றத்தை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Starts Winter Service Camp: Offers Free Check Ups, Complimentary Washes & More
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X