விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!

வர்த்தக வாகன சந்தையிலும் வலுவான இடத்தை நோக்கி மாருதி பயணிக்க துவங்கி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் சூப்பர் கேரி மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!

கார் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த 2016ம் ஆண்டு இலகு ரக வர்த்தக வாகன சந்தையிலும் களமிறங்கியது. தனது தாய் நிறுவனமான சுஸுகி ஒத்துழைப்புடன் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மினி டிரக் மாடலை இந்தியாவில் சூப்பர் கேரி என்ற பெயரில் களமிறக்கியது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சூப்பர் கேரி மினி டிரக் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10,000 யூனிட்டுகள் என்ற விற்பனையை கடந்த சூப்பர் கேரி மினி டிரக், தற்போது 50,000 என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதன் ரகத்தில் விற்பனையில் மிகச் சிறப்பான இடத்தையும் வகித்து வருகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!

நாட்டின் 217 நகரங்களில் செயல்பட்டு வரும் 319 வர்த்தக வாகன ஷோரூம்கள் வாயிலாக இந்த சூப்பர் கேரி மினி டிரக்கை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சந்தையில் மிக வலுவான போட்டியாளராக மாறுவதற்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!

சூப்பர் கேரி வாகனம் சிஎன்ஜி மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிரது. சிஎன்ஜியில் இயங்கும் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சினுடன் சிஎன்ஜி மாடல் கிடைக்கிறது. சிஎன்ஜி மற்றும் டீசல் மாடல்கள் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக இருக்கும்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!

மாருதி சுஸுகி சூப்பர் கேரி மினி டிரக்கின் டீசல் மாடலில் இரண்டு சிலிண்டர்களுடன் கூடிய 793 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 32 பிஎச்பி பவரையும், 75 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!

மாருதி சூப்பர் கேரி வாகனம் 2,183 மிமீ நீளமும், 1,488 மிமீ அகலமும் கொண்டது. இந்த வாகனத்தில் 740 கிலோ எடையை ஏற்றும் திறன் வாய்ந்தது. இந்த மினி டிரக் 175 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!

இலகுவான ஸ்டீயரிங் சிஸ்டம், மெக்பர்ஷன் சஸ்பென்ஷன் அமைப்பு, உறுதியான பின்புற ஆக்சில், கேபினில் மொபைல் சார்ஜர், மல்டி பர்போஸ் ஸ்டோரேஜ் அறைகள் உள்ளிட்ட அடிப்படையான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.4.04 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Super Carry has achieved 50,000 Sales Milestone In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X