புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. தற்போது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை தொடர்ந்து தக்க வைக்க முடியாத நிலை இருக்கிறது.

புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

எனவே, சியாஸ், எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு மாருதி பிரெஸ்ஸா காரிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு வரும் 2020ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக என்று ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி தெரிவிக்கிறது.

புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

மாருதி பிரெஸ்ஸா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த புதிய மாடல் வந்தபிறகு 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு விற்பனையில் இருந்து விலக்கப்படும்.

புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் வரும் மாருதி பிரெஸ்ஸா காரின் டிசைனிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வர இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் சிறிய மாற்றங்கள் மற்றும் புதிய பம்பர் அமைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

ஹூண்டாய் வெனியூ கார் வருகையால் மாருதி பிரெஸ்ஸா காரின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, கூடுதல் சிறப்பம்சங்களையும் எதிர்பார்க்கலாம். மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும்.

புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி 4 மீட்டர் நீளத்திற்குள் இருக்கிறது. மேலும், இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தினால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும். ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதால், வரிச்சலுகை கிடைக்காது. எனவே, விலையும் கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது.

புதிய மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

மாருதி எர்டிகா காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் விற்பனையில் இருந்து விலக்கப்பட இருக்கிறது. அதேபோன்று, மாருதி பிரெஸ்ஸா டீசல் மாடல் அடுத்து வரும் மாதங்களில் விற்பனையில் இருந்து விலக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த மாடலை வாங்க விரும்புவோர் கூடிய சீக்கிரத்தில் தங்களது முடிவை இறுதி கொள்வது பலன் தரும்.

Most Read Articles
English summary
According to reports, Maruti Suzuki is planning to launch Vitara Brezza SUV with Petrol engine option to the 2020 Auto expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X