மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான முக்கியச் செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை பார்க்கலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அண்மையில் வந்த புதிய ஹூண்டாய் வெனியூ கார் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு கடுமையான சந்தைப் போட்டியை கொடுத்து வருகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

இதனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை வளைத்து போட்டு வருகிறது மாருதி நிறுவனம். இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்க திட்டமிட்டிருக்கும் பலரும், பிஎஸ்-6 மாடலுக்காக காத்திருக்கின்றனர்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. இந்த எஞ்சினுக்கு விரைவில் கல்தாக கொடுக்கப்பட இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படாது என்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் கொண்டு வரப்பட இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

இந்த மாடலை வாங்குவதற்காக பலரும் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, வரும் டிசம்பருக்குள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் புதிய மாற்றங்களும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வரும் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் விலையும் கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை போன்றே, மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியிலும் இதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த மாடலும் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
According to report, Maruti Suzuki will launch Vitara Brezza with BS-6 engine later this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X