மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் இந்திய வருகை குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் கலக்கி வருகிறது. அந்நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மிகப்பெரிய ஹிட் மாடலாக வலம் வருகிறது. மாதத்திற்கு 10,000 முதல் 14,000 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி வருகிறது.

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், எஸ்யூவி மார்க்கெட்டில் வலுவான சந்தையை பெறும் விதத்தில், புதிய பிரிமீயம் எஸ்யூவி மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது மாருதி சுஸுகி. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சுஸுகி விட்டாரா பிரிமீயம் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

இந்த புதிய மாருதி விட்டாரா எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. எனவே, நிச்சயம் பெரிய அளவிலான சந்தையை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இடவசதியிலும் மிகச் சிறப்பான மாடலாக இருக்கும்.

இந்த எஸ்யூவியின் டிசைன் தற்போதைய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை போலவே இருந்தாலும், குறிப்பிடத்தக்க மாறுதல்களுடன் பிரிமீயம் டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

அதேபோன்று, இன்டீரியரும் மிக பிரிமீயமாக இருக்கும். டேஷ்போர்டு மற்றும் உட்புறத்தில் ஏராளமான அலங்கார அம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவியில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. எனினும், அடுத்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

இந்த புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவி ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல்களுடன் போட்டி போடும். இந்த ரகத்தில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டாலும், மாருதி தயாரிப்பு என்பது இதற்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சமாக இருக்கும்.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Maruti Suzuki Vitara Premium SUV Launch Expected Next Year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X