கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மலிவான விலையில், புதிய எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

உலக மக்களின் பார்வை எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்பி வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க ஆகும் செலவை காட்டிலும், எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க ஆகும் செலவு மிக மிக குறைவு. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

எனவேதான் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெகு வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக மக்களை சென்று சேரவில்லை. இதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

இந்திய மக்கள் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள். பட்ஜெட் விலையில் கிடைக்கும் வாகனங்கள்தான் இந்திய மக்களின் ஒரே தேர்வாக இருக்கும். ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகம்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பிரபலம் அடையாமல் இருப்பதற்கு இதுதான் முக்கியமான காரணம். மற்றொரு காரணம் ரேஞ்ச். ஒருமுறை சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் தற்போது விற்பனையாகும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவான ரேஞ்ச் கொண்டுள்ளன. இவ்விரு காரணங்களால்தான் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் இந்திய மக்களை ஈர்க்காமல் உள்ளன.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

ஆனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதனை நன்றாக புரிந்து கொண்டுள்ளன. எனவே குறைவான விலையில், அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர பல்வேறு முன்னணி நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

ஹூண்டாய் நிறுவனம் கோனா (Hyundai Kona) என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை, வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் விலை 25 லட்ச ரூபாயாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை இது மிகவும் அதிகமான விலை. அடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Mahindra XUV300 Electric) களமிறக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ.20 லட்சத்திற்குள் இருக்கும் என கூறப்படுகிறது. ஹூண்டாய் கோனாவுடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் எதிர்பார்க்கப்படும் விலை குறைவுதான்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

என்றாலும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்துமா? என்பது சந்தேகமே. ஏனெனில் காரின் விலை 20 லட்ச ரூபாயாக இருக்கும்போது, அதனை வைத்துக்கொண்டு இந்திய மார்க்கெட்டில் எவ்வித புரட்சியையும் ஏற்படுத்தி விட முடியாது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

ஆனால் இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்த கம்பீரமாக தயாராகி வருகிறது மாருதி சுஸுகி. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தன் முதல் எலெக்ட்ரிக் காரை அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் (Maruti Suzuki WagonR Electric), மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பு. இந்த கார் 2020ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார், இந்தியாவின் பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை, ரேஞ்ச் உள்ளிட்ட தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை 7 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும் என ஆட்டோகார் தளம் வெளியிட்டுள்ள செய்தி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற செய்துள்ளது. இது உண்மையில் சாத்தியம்தானா? என்ற சந்தேகம் உங்களுக்கு நிச்சயமாக எழும்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

ஆனால் உங்கள் சந்தேகத்தை ஒதுக்கி வைத்து விட்டு நம்புங்கள். இது உண்மையில் சாத்தியம்தான். புரளி எல்லாம் கிடையாது. மாருதி சுஸுகி நிறுவனம் எப்படி 7 லட்ச ரூபாய்க்குள் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை வழங்கும்? என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா (FAME India - Faster Adoption and Manufacture of Electric Vehicles) என்ற திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மத்திய அரசால் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

தற்போது ஃபேம் இந்தியா திட்டத்தின் 2ம் கட்டத்தை (FAME II) மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதன் கீழ் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிகப்படியான மானியம் வழங்கப்படவுள்ளது. ஃபேம் II திட்டம் மூலம், எலெக்ட்ரிக் காரின் மொத்த விலையில் 25 சதவீத தொகை மானியமாக கிடைத்துவிடும்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

உதாரணத்திற்கு எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்சம் என்றால், 2.50 லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலையும் கூட 10 லட்சத்திற்குள்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

ஒரு எலெக்ட்ரிக் காருக்கு 10 லட்ச ரூபாய் என்பதே ஓரளவிற்கு நியாயமான விலைதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் 25 சதவீதம் அளவிற்கு மானியம் கிடைப்பதால், வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை வெறும் 7.50 லட்ச ரூபாயாக குறைந்து விடும்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

ஆக மொத்தத்தில் 7-7.50 லட்ச ரூபாய்க்குள் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை வாங்கி விட முடியும். இது எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். பொதுவாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால், சாலை வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும். இதனால் அவற்றின் ஆன் ரோடு விலை மிகவும் அதிகரிக்கும்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து ஆன்ரோடு விலை சற்று மட்டுமே அதிகரிக்கும்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

மலிவான விலை என்பதால், மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார், வாடிக்கையாளர்கள் பலரின் ஆவலை தூண்டியுள்ளது. இதுதவிர இந்த காரின் ரேஞ்ச் உள்ளிட்ட தகவல்களும் தற்போது வெளியே கசிந்துள்ளன.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர்கள் வரை எளிதாக பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறுகிய தொலைவு பயணம் மேற்கொள்பவர்கள்தான் பெரும்பாலும் வேகன் ஆர் காரை அதிகம் தேர்வு செய்கின்றனர்.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

எனவே 200 கிலோ மீட்டர் ரேஞ்ச் என்பது போதுமான ஒன்றாகவே இருக்கும். அத்துடன் வெறும் 40 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 75-80 சதவீதம் வரை சார்ஜ் ஏறிவிடும் வகையிலான பேட்டரிதான் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ளது.

கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்

அதாவது 40 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 150-160 கிலோ மீட்டர்கள் வரை எளிதாக பயணம் செய்ய முடியும். மிகவும் மலிவான விலை, ஓரளவிற்கு நல்ல ரேஞ்ச் என்பதால், வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Wagon R Electric Will Be Affordable: Likely To Cost Under Rs.7 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X