கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாருதி எக்ஸ்எல்-6 காருக்கு சிறப்பான முன்பதிவு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

மாருதி எர்டிகா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பிரிமீயம் அம்சங்கள் கொண்ட 6 சீட்டர் மாடலாக எக்ஸ்எல்-6 கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல் மாடலில் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

மாருதி எர்டிகா காரைவிட அதிக சொகுசான இருக்கைகள், கூடுதல் வசதிகள் மற்றும் புதிய டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வந்துள்ளதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த நிலையில், மாருதி எக்ஸ்எல்-6 காருக்கு இதுவரை 2,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

பெட்ரோல் மாடலில் மட்டுமே புதிய மாருதி எக்ஸ்எல்-6 கார் கிடைக்கும். டீசல் மாடலிலும் வந்திருந்தால், நிச்சயம் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரில் புதிய முகப்பு வடிவமைப்பு, ஸ்கிட் பிளேட்டுகள், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்ட புதிய டிசைன் அம்சஙகள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வந்துள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள்,, எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

உட்புறத்திலும் மிக பிரிமீயமாக இருக்கிறது. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். மேலும், நேவிகேஷன் வசதியும் உள்ளது. பின்புற பயணிகளுக்கான ரியர் ஏசி வென்ட்டுகளும் உள்ளன.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

இந்த காரில் மிக சொகுசான பிரிமீயமான லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருப்பதால், வசதியாக பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 கார் ரூ.9.79 லட்சம் என்ற சவாலான விலையில் வந்துள்ளது. எனவே, தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருக்கும், முன்பதிவு எண்ணிக்கை உயரும் என்று கருதப்படுகிறது. தேவை இருந்தால், டீசல் மாடலிலும் அறிமுகம் செய்வோம் என்று மாருதி கூறி இருக்கிறது. எனவே, விரைவில் டீசல் மாடலையும் மாருதி பரிசீலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலமாக, முன்பதிவு எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்!

மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். ரூ.25,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது. மஹிந்திரா மராஸ்ஸோ, ரெனோ லாட்ஜி கார்களுக்கு போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki XL6 MPV Car has recieved over 2000 Bookings in India.
Story first published: Wednesday, August 21, 2019, 18:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X