புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மாருதி எர்டிகா காரின் அடிப்படையிலான பிரிமீயம் கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்எல்-6 கார் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிக தரமான பாகங்கள், அதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ள புதிய மாருதி எக்ஸ்எல்-6 கார் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸீட்டா வேரியண்ட் (மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்)

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புற க்ரில் அமைப்பில் க்ரோம் பட்டை அமைப்பு இடம்பெற்றுள்ளது. முன்புறத்திலும், பின்புறத்திலும் ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் உள்ளன. ரூஃப் ரெயில்கள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், க்ரோம் கைப்பிடிகள், விசேஷ கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட சைடு மிரர்கள், அதிலேயே கொடுக்கப்பட்ட சைடு மிரர்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

உட்புறத்தில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீலில் சில்வர் ஆக்சஸெரீயுடன் அலங்காரமாக தெரிகிறது. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டி குறைப்பதற்கான வசதி உள்ளது. நடுவரிசையில் ஆர்ம் ரெஸ்ட் வசதியுடன் இரண்டு கேப்டன் இருக்கைகள் உள்ளன. மூன்றாவது வரிசை இருக்கையை 50:50 என்ற விகிதத்தில் மடக்கும் வசதியும், சாய்மான வசதியும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

அனைத்து இருக்கைகளுக்கும் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஹெட்ரெஸ்ட், உட்புறத்திலும் க்ரோம் கைப்பிடிகள், கலர் டிஎஃப்டி திரையுடன் மல்டி இன்பர்மேஷன் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எஞ்சின் ஸ்டார்ட்- ஸ்டாப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், இரண்டாவது வரிசைக்கான மேனுவல் அட்ஜெஸ்ட்டபிள் ஏசி, ரிமோட் கீ லெஸ் என்ட்ரி வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், டே-நைட் உட்புற ரியர் வியூ மிரர் ஆகியவையும் உள்ளன.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸடம் உள்ளது. வாய்ஸ் கமாண்ட் மற்றும் புளூடூத் இணைப்பு வசதியையும் பெற்றிருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டியூவல் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக் அசிஸ்ட் மற்றும் இபிடியுடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. எல்இடி பனி விளக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு அலர்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸீட்டா ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக ஹில் ஹோல்டு வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மலைச்சாலைகளிலும், மேடான சாலைகளில் செல்லும்போது இது பாதுகாப்பை உறுதி செய்யும். மேனுவல் மாடலில் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஆல்ஃபா வேரியண்ட் (மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்)

மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸீட்டா வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களை சேர்த்து ஸீட்டா வேரியண்ட்டில் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், லெதர் இருக்கைகள், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை இந்த டாப் வேரியண்ட்டில் மிக முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 எம்பிவி காரின் ஸீட்டா மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் ரூ.9.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.10.36 லட்சம் விலையிலும் கிடைக்கும். ஸீட்டா மேனுவல் வேரியண்ட் ரூ.10.89 லட்சத்திலும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.11.46 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மாருதி எக்ஸ்எல்-6 கார் சாதாரண எர்டிகா காரைவிட அதிக சிறப்பம்சங்களுடன் மிக சரியான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் ரெனோ லாட்ஜி கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்பதுடன், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த எம்பிவி கார் தேர்வாக அமையும்.

Most Read Articles
English summary
Here is the break-down of the variant-wise features on the new Maruti XL-6 MPV car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X