எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள 2020 பிரெஸ்ஸா மாடல் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டதை இதற்கு முன்னர் பல முறை பார்த்துள்ளோம். தற்போது எந்தவொரு மறைப்பும் இல்லாமல் இந்த புதிய கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள இடம் டீலர்ஷிப் ஷோரூமை போன்று காட்சியளிக்கிறது. இதனால் இந்த காரின் விற்பனை தொடங்கப்படவுள்ளதா என்ற குழப்பம் வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது.

எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

முந்தைய சோதனை ஓட்டங்களை விட இந்த முறை 2020 மாருதி ப்ரெஸ்ஸா மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் சிறிது தெளிவாக தெரிகின்றன. காரின் முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட்ஸ் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் முன்புற பம்பர் பெரிய வடிவத்திற்கும், ஃபாக் விளக்கு கூடுதலாக புதிய சில்வர் பார்ட்டரையும் பெற்றுள்ளன.

எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

ஆனால் க்ரோம் க்ரில் பாகங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. காரின் வெளிப்புற உலோகத்திலும் எந்த மாற்றத்தையும் முந்தைய மாடலில் இருந்து மாருதி நிறுவனம் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. பின்புறத்திலும் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

உட்புறத்தில் மிக சிறிய அளவில் அப்டேட்களை இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் ஹூண்டாய் வென்யூ மாடலுடன் போட்டியிடுவதற்காக அந்த கார் கொண்டுள்ளதுபோல் சில இணைப்புகளை பெறலாம் என கூறப்படுகிறது.

எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

பிரெஸ்ஸா மாடல் கொண்டுள்ள டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மாருதி நிறுவனம் மாற்ற போவதில்லை என்று ஏற்கனவே தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இதனால் பிரெஸ்ஸாவின் இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜினை மட்டும் தான் பெறும் என தெரிகிறது. பிரெஸ்ஸாவின் பெட்ரோல் வேரியண்ட் கார் நான்கு சிலிண்டர் அமைப்பை கொண்ட 1.5 லிட்டர் என்ஜினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

இதே பெட்ரோல் என்ஜின் மாருதியின் மற்ற மாடல் கார்களான சியாஸ் மற்றும் எர்டிகாவிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பிஎஸ்6 தரத்தில் உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் 105 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன.

எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

ஒருவேளை இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டால், அது மாருதி நிறுவனத்தால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜினாக தான் இருக்கும். டீசல் என்ஜினை பிஎஸ்6 தரத்திற்கு மாற்ற மாருதி நிறுவனம் எண்ணினால் இந்த டீசல் என்ஜின் 2020 சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களிலும் பொருத்தப்படும்.

எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

தற்சமயம் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த 2020 மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரை டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணியில் ஏற்கனவே மாருதி சுசுகி நிறுவனம் இறங்கிவிட்டது. இதனால் தான் அடையாளம் காணப்பட்டுள்ள இடம் டீலர்ஷிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

எந்தவொரு மறைப்பின்றி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020 மாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்...

இந்த புதிய காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஸ்ஸா மாடல் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு மாற்றப்பட்டாலும் ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற மாடல்களுடன் தான் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Rushlane

Most Read Articles
English summary
2020 Maruti Brezza petrol BS6 facelift spied undisguised at dealer?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X