புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் பெட்ரோல் மாடல் குறித்த முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த காருக்கான காத்திருப்பவர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கும். இதுதொடர்பான தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 மாடலாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விளங்குகிறது. இந்த காரின் விற்பனை மாருதி நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் வருகையால் ஓரிரு மாதங்கள் விற்பனையில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா கார் தற்போது 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் தேர்வில் கிடைத்து வருகிறது. ஆனால், புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது இந்த எஞ்சினை தொடர்ந்து விற்பனை செய்ய இயலாத நிலை இருக்கிறது. அத்துடன், இந்த எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்தும் திட்டம் ஃபியட் வசம் இல்லை.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் தேர்வை வழங்க மாருதி முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்துடன் பிஎஸ்-4 கார்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கு மாருதி முடிவு செய்துள்ளதால், விரைவில் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

இந்த சூழலில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடலின் உற்பத்தி துவங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் ஏற்கனவே சியாஸ், எர்டிகா கார்களில் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

டீசல் கார் உற்பத்தியை முற்றிலுமாக தவிர்க்க முடிவு செய்திருந்த மாருதி, இப்போது 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. ஃபியட் நிறுவனத்தின் இந்த டீசல் எஞ்சின் ஏற்கனவே எஸ் க்ராஸ் காரில் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். போதிய விற்பனை இல்லாததால் நிறுத்தப்பட்டது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, டிசைனிலும் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Maruti Suzuki is all set to finally introduce the petrol version of their Vitara Brezza SUV in the Indian market. According to GaadiWaadi, production of the Maruti Vitara Brezza petrol model has already begun, indicating a launch anytime soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X