2019ல் வேகன் ஆர் காருக்கு கிடைத்த வெற்றி இதுதான்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாருதி சுஸுகி..!

மாருதி வேகன்ஆர் கார் புதிய சாதனை ஒன்றை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளது. இதனால், தற்போது அந்த நிறுவனம் மகிழ்ச்சியின் உச்சத்தில் திகைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

2019ல் வேகன் ஆர் காருக்கு கிடைத்த வெற்றி இதுதான்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாருதி சுஸுகி..!

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை வேகன்ஆர் மாடலைக் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்காக அறிமுகம் செய்தது. புதிய வடிவமைப்பு மற்றும் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருந்ததால் இந்த 2019 வேகன் ஆர் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து.

2019ல் வேகன் ஆர் காருக்கு கிடைத்த வெற்றி இதுதான்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாருதி சுஸுகி..!

இதனை நிரூபிக்கும் விதமாக அறிமுகமான முதல் பத்து நாட்களிலேயே 12 ஆயிரம் முன்பதிவுகளை இந்த கார் பெற்றது. இந்தநிலையில், இந்த கார் மேலும் ஓர் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மாருதி சுஸுகி 2019 வேகன்ஆர் வெளிந்த மூன்று மாதங்களில் 41 ஆயிரத்து 861 யூனிட்களை விற்பனைச் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

2019ல் வேகன் ஆர் காருக்கு கிடைத்த வெற்றி இதுதான்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாருதி சுஸுகி..!

அவ்வாறு, இந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் 10 ஆயிரத்து 48 யூனிட்களையும், பிப்ரவரி மாதத்தில் 15 ஆயிரத்து 661 யூனிட்களையும், மார்ச் மாதத்தில் 16 ஆயிரத்து 152 யூனிட்களையும் விற்பனைச் செய்துள்ளது.

புதிய மாருதி வேகன் ஆர் காரின் வெளிப்புற தோற்றம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, அதன் உட்புற டிசைனிலும் சிறதளவு மாற்றம் செய்யப்படுள்ளது. அந்த வகையில், இந்த புதிய மாடல் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

2019ல் வேகன் ஆர் காருக்கு கிடைத்த வெற்றி இதுதான்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாருதி சுஸுகி..!

இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. அதில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 67பிஎச்பி பவரையும், 90என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதேபோன்று, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 83பிஎச்பி பவரையும், 113என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

2019ல் வேகன் ஆர் காருக்கு கிடைத்த வெற்றி இதுதான்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாருதி சுஸுகி..!

இதேபோன்று, இந்த கார் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. இதைத்தொடர்ந்து, எல்பிஜி ஆப்ஷனிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய 2019 மாருதி வேகன் ஆர் காரில் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2019ல் வேகன் ஆர் காருக்கு கிடைத்த வெற்றி இதுதான்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாருதி சுஸுகி..!

இதைத்தொடர்ந்து, வேகன்ஆர் காரை 2019ம் ஆண்டின் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்பவும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாருதி வேகன் ஆர் கார் ரூ.4.19 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10, டாடா டியாகோ ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Maruti Wagon R Crosses 16K Sales In March. Read In Tamil.
Story first published: Saturday, April 6, 2019, 18:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X