க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் மாருதி வேகன் ஆர் கார் குறைவான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குளோபல் என்சிஏபி அமைப்பு பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் வைத்து, கார்களை க்ராஷ் டெஸ்ட் நடத்தி பாதுகாப்பு தர மதிப்பீடு செய்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களை க்ராஷ் டெஸ்ட் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, பல கார்கள் பாதுகாப்பு தரத்தில் பூஜ்யத்தை பெற்றது.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் கார்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தை #SaferCarsForIndia என்ற கொள்கையின் கீழ் குளோபல் என்சிஏபி அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏற்ப மத்திய அரசும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட சில பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

இந்த நிலையில், கார்களின் பாதுகாப்பு தரம் வெகுவாக மேம்பட்டு வருகிறது. மேலும், டாடா நெக்ஸான் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் என்ற அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்று அசத்தியது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சில கார் மாடல்களை சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறது குளோபல் என்சிஏபி அமைப்பு. இதில், மாருதி வேகன் ஆர் காரும் ஒன்று.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட எல்எக்ஸ்ஐ வேரியண்ட் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த வேரியண்ட்டில் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது.

சோதனை முடிந்து ஆய்வுகள் செய்யப்பட்டதில் மாருதி வேகன் ஆர் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்புக்கான 17 புள்ளிகளில் 6.93 புள்ளிகளை மட்டுமே பெற்றது. அதேபோன்று, சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் அதிகபட்சமாக 49 புள்ளிகளுக்கு 16.33 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மொத்த பாதுகாப்பு தரத்தில் 5க்கு இரண்டு என்ற பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது மாருதி வேகன் ஆர் கார்.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

இந்த மோதல் சோதனையில் மாருதி வேகன் ஆர் காரின் கட்டுமானம் போதிய வலிமை இல்லாததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான பாதுகாப்பு பரவாயில்லை. ஆனால், முன் இருக்கை பயணிகளின் மார்பு பகுதிக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், கால்களுக்கான பாதுகாப்பு சுமார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, விபத்தில் சிக்கினால் மார்பு பகுதி அதிக காயமடைய வாய்ப்பு எழும். பெடல்கள் ஓட்டுனரின் கால்களுக்கு காயத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சமும் மோசம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 வயது மதிக்கத்தக்க குழந்தை பொம்மை காருக்குள் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில், பொம்மையின் தலை முன் இருக்கையில் மோதி காயமடைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாத குழந்தை பொம்மைக்கான பாதுகாப்பு பரவாயில்லை. ஆனாலும், மார்பு பகுதிக்கு அதிக காயமடையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாருதி வேகன் ஆர் காரின் வேரியண்ட்டில் த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்பது கவனிக்கத்தக் விஷயமாக கூறலாம். மொத்தத்தில், மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டின் பாதுகாப்பு தரம் சுமார் என்பது இந்த க்ராஷ் டெஸ்ட் சோதனையின் மூலமாக புலனாகி உள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

இந்த நிலையில், பட்ஜெட் கார் மாடல்களின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் ஓட்டுனர் பக்கத்திற்கான உயிர் காக்கும் காற்றுப் பை கொடுக்கப்படுகிறது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, முன் இருக்கை பயணிக்கும் ஏர்பேக் கொடுப்பது கட்டாயமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் எல்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.4.31 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.7,000 கூடுதலாக கொடுத்தால் எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்!

தற்போது இந்திய க்ராஷ் டெஸ்ட் விதிகளின்படி, 56 கிமீ வேகத்தில் முன்பக்கத்தை மோத செய்து ஆய்வுகள் செய்யப்படுகின்றன. ஆனால், குளோபல் என்சிஏபி அமைப்பு மணிக்கு 64 கிமீ வேகத்தில் காரை தடுப்பு மீது மோத செய்து ஆய்வு நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Wagon R car has recieved poor rating in Global NCAP crash test results.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X