Just In
- 8 min ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 48 min ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 2 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 3 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- News சம்மர்லயும் சளி பிடிக்கிற அளவுக்கு நான் ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய மார்கெட்டில் தனது பிரபலமான மாடல் காரான வேகன்ஆர் ஹேட்ச்பேக்கின் ப்ரீமியம் வெர்சனை வெளியிடவுள்ளது. இந்த ப்ரீமியம் வெர்சனுக்கு மாருதி எக்ஸ்எல்5 எனவும் அந்நிறுவனம் பெயரிட்டு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸோ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக இந்த கார் இந்திய சாலைகளில் பல முறை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கப்பட்டு வருகின்றன. அப்படி சமீபத்தில் முழு மறைப்புடன் டெஸ்ட் செய்யப்பட்ட எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனுடன் இதுவரை வெளிவராத இக்காரின் சில தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்த புதிய படத்திலிருந்து பார்க்கும் போது எக்ஸ்எல்5 காரின் அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் முன்புற பகுதி காரில் இரட்டை ஹெட்லைட் அமைப்பு உள்ளதை தெளிவாக காட்டுகிறது. இதற்கு மேல் புறத்தில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வேகன்ஆர் காரில் இருக்கும் முன்புற க்ரிலை விட வித்தியாசமான க்ரில் அமைப்பை இந்த ப்ரீமியம் வெர்சனில் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்பை புகைப்படங்கள் மூலம் இரு ஏர் டேம்கள் பம்பரின் மீது உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இதே பம்பரின் முனைகளில் தான் பனி விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்களின் மூலம் பார்த்தால், காரின் பின்புற பகுதி வேகன்ஆரில் உள்ளது போலவே இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் எப்படியிருந்தாலும் எக்ஸ்எல்5 புதியதாக வடிவமைக்கப்பட்ட பின்புற விளக்குகள் மற்றும் மேலும் சில மாறுதல்களையும் கொண்டிருக்கும்.
இந்த புதிய எக்ஸ்எல்5யின் உட்புற பாகங்கள் பற்றிய எந்த தகவல்களையும் பெற முடியவில்லை. ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி எக்ஸ்எல்5-ன் உட்புற பாகங்கள் வேகன்ஆரில் உள்ளதை விட மிக சிறிய அளவிலான வேறுபாடுகளையே கொண்டிருக்கும்.
இதன் என்ஜின் பிஎஸ்-6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் வெளியிடப்படும் ஆற்றல், வேகன்ஆரில் உள்ளதை போலவே 82 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளியிடவுள்ளது. மேலும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வேகன்ஆரில் உள்ள அதே ஐந்து வேக நிலைகளை வழங்கும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த மாருதி எக்ஸ்எல்5 மாடல் மாருதி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்பால் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த டீலர்ஷிப் இக்னிஸ், பலேனோ, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்எல்6 மாடல்களின் வரிசையில் விலை குறைவான மாடலாக இந்த எக்ஸ்எல்5-ஐயும் விற்பனை செய்யவுள்ளது.
இந்த மாருதி சுசுகி எக்ஸ்எல்5 வேகன்ஆர் மாடலின் ப்ரீமியன் வெர்சனாக இந்தியா முழுவதும் நெக்ஸா டீலர்ஷிப்களால் விற்பனை செய்யப்படவுள்ளது. இதனால் இக்காரின் தயாரிப்பிலும் விற்பனையிலும் மாருதி நிறுவனம் வேகன்ஆருக்கு பின்பற்றிய சூத்திரத்தையே பின்பற்றவுள்ளது. ஆனால் இந்த புதிய மாடலின் விலை வேகன்ஆர்-ஐ விட அதிகமாக ரூ.4.5 லட்சத்திற்கு எக்ஸ்ஷோரூம்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் அறிமுகம் 2020 ஆட்டோ எக்ஸோ நடக்கும் என தெரிகிறது.
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!