புதிய வி-6 எஞ்சினுடன் மஸேரட்டி கார்கள் இந்தியாவில் அறிமுகம்!

புதிய வி-6 எஞ்சின் தேர்வுடன் மஸேரட்டி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய வி-6 எஞ்சினுடன் மஸேரட்டி கார்கள் அறிமுகம்!

மஸேரட்டி நிறுவனத்தின் கிப்லி, குவாட்ரோபோர்ட்டே மற்றும் லெவன்டே ஆகிய மாடல்களில் இந்த புதிய 3.0 லிட்டர் வி-6 பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக மஸேரட்டி நிறுவனத்தின் பவர்டிரெயின் பிரிவால் உருவாக்கப்பட்டு, ஃபெராரி நிறுவனத்தின் மரனெல்லோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த புதிய 3.0 லிட்டர் வி-6 பெட்ரோல் எஞ்சின் யூரோ-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை டர்போசார்ஜர்கள் மற்றும் டைரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வந்துள்ள இந்த எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனையும், மஸேரட்டி கார்களுக்கு உரித்தான சைலென்சர் சப்தத்தையும் வழங்கும் விதத்தில் தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளது.

புதிய வி-6 எஞ்சினுடன் மஸேரட்டி கார்கள் அறிமுகம்!

மஸேரட்டி நிறுவனத்தின் புதிய வி-6 டர்போ எஞ்சின் கார் மாடல்களை பொறுத்து இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கிப்லி, குவாட்ரோபோர்ட்டே மற்றும் லெவன்டே கார்களில் இந்த வி6 எஞ்சின் அதிகபட்சமாக 345 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய வி-6 எஞ்சினுடன் மஸேரட்டி கார்கள் அறிமுகம்!

மஸேரட்டி நிறுவனத்தின் புதிய வி-6 டர்போ எஞ்சின் கார் மாடல்களை பொறுத்து இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கிப்லி, குவாட்ரோபோர்ட்டே மற்றும் லெவன்டே கார்களில் இந்த வி6 எஞ்சின் அதிகபட்சமாக 345 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய வி-6 எஞ்சினுடன் மஸேரட்டி கார்கள் அறிமுகம்!

கிப்லி எஸ், குவாட்ரோபோர்ட்டே எஸ் மற்றும் லெவன்டே எஸ் கார்களில் இருக்கும் இதே எஞ்சின் அதிகபட்சமாக 424 பிஎச்பி பவரையும், 580 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த கார்களில் மேம்படுத்தப்பட்ட 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புதிய மஸேரட்டி கார்களில் உயர்தர லெதர் மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அத்துடன், ஒவ்வொரு வண்ணத்திற்கும் விசேஷ தையல் வேலைப்பாடுகளுடன் கிடைக்கும். இதே தையல் வேலைப்பாடுகள் கதவுகளிலும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

MOST READ: கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

புதிய வி-6 எஞ்சினுடன் மஸேரட்டி கார்கள் அறிமுகம்!

புதிய குவார்டோபோர்ட்டே கார் 10 வண்ணத் தேர்வுகளிலும், கிப்லி மற்றும் லெவன்டே கார் 11 வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும். இந்த கார்களுக்கு 20 மற்றும் 21 அங்குல சக்கரங்கள் விருப்பத் தேர்வாக வழங்கப்படுகின்றன.

இந்த வி-6 எஞ்சினுடன் வந்துள்ள புதிய மஸேரட்டி குவாட்ரோபோர்ட்டே கார் ரூ.1.64 கோடி விலையிலும், குவாட்ரோபோர்ட்டே எஸ் கார் ரூ.1.73 கோடி விலையிலும் கிடைக்கும். மஸேரட்டி கிப்லி கார் ரூ.1.31 கோடி விலையிலும், மஸேரட்டி கிப்லி எஸ் கார் ரூ.1.44 கோடி விலையிலும் கிடைக்கும். லெவன்டே கார் ரூ.1.42 கோடி விலையிலும், லெவன்டே எஸ் கார் ரூ.1.42 கோடி விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

Most Read Articles

மேலும்... #மஸராட்டி
English summary
Maserati has launched new variants of Quattroporte, Levante and Ghibli with V6 petrol engine option in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X