இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் களமிறக்கிய சீனாவை சேர்ந்த செயிக் வாகன குழுமம் அடுத்து தனது மேக்சஸ் பிராண்டு கார்களையும் இந்தியாவில் களமிறக்க உள்ளது. இதற்காக, மேக்சஸ் நிறுவனத்தின் டி90 எஸ்யூவி இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளது. இதற்காக டி90 எஸ்யூவி காரை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களிலும் மேக்சஸ் நிறுவனம் ஈடுப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..

முழுக்க முழுக்க சைனீஸ் கார்களின் டிசைன்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் எம்ஜி மோட்டார்ஸ் வாகனங்களின் அடிப்படையில் உருவானது எனவும் கூறப்படுகிறது. மாக்ஸஸ் நிறுவனம் இந்த டி90 மாடலில் தனது பிரபல ட்ரக்கான டி60-ன் ஏணி வடிவிலான சேஸிஸை மாற்றமின்றி அப்படியே கொடுத்துள்ளது.

இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..

இந்த டி90 காரின் பரிமாண அளவுகள் அனைத்தும் அதிகமாகவே உள்ளது. இந்த காரின் நீளம் 5,005 மிமீ, அகலம் 1,932 மிமீ மற்றும் உயரம் 1,875 மிமீ ஆகும். 2,950 மிமீ-ல் இதன் வீல் பேஸ் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகப்படியான புற அளவுகளில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளதால் டி90 பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ட்ரக் தோற்றத்தில் தான் இருக்கும்.

இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..

மாக்ஸஸ் டி90 மாடலில் எல்இடி ஹெட்லைட்ஸ், 21 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், பனோராமிக் சன்ரூப், 12.3 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு, 8 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை தரும் திரை மற்றும் 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை போன்றவை உட்புற அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..

டி90 மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை மட்டும் மாக்ஸஸ் நிறுவனம் தற்போதைக்கு பொருத்தியுள்ளது. டி90 மாடலின் டீசல் வேரியண்ட் தயாரிப்பு பணியில் உள்ளது. இந்த காரின் அறிமுகத்திற்கு முன்னதாக இதன் டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்துவிடும் என நம்பலாம்.

இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..

இதன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 224 பிஎச்பி பவரையும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த என்ஜினுடன் 6 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. 4 டபிள்யூடி அமைப்பும் கூடுதல் விருப்பமாக கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை அடிப்படையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மாக்ஸஸ் டி90 கார், சீனாவில் இருந்து பாகங்களாக எடுத்து வரப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரின் விலை இந்திய மார்க்கெட்டில் ரூ.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.

இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..

பெரிய அளவிலான தோற்றத்தினால் இந்த கார் டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் மாடலுக்கு போட்டியினை கொடுக்கும் என கூறப்பட்டாலும் இதன் விலை மற்றும் தொழிற்நுட்பங்களால் மாக்ஸஸ் டி90 மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் உடன் தான் விற்பனையில் கடுமையாக போட்டியிடும் என்பது உறுதி. இந்த காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
மேலும்... #auto news #ஆட்டோ
English summary
Maxus D90 spied in India, will be MG’s Ford Endeavour rival
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X