மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்!

வரும் 2021ம் ஆண்டு முதல் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் மின்சார கார்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்!

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி பிராண்டில் அதிசெயல்திறன் மிக்க கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும், ஏஎம்ஜி பிராண்டில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் கார்கள் தனித்துவமான டிசைன் அம்சங்கள், அதிசெயல்திறன் மிக்க எஞ்சினுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்!

அனைத்துமே மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் விற்பனை செய்யப்படும் சாதாரண வகை சொகுசு கார்களின் அடிப்படையில் அதிசெயல்திறன் மிக்க மாடல்களாக உருவாக்கப்படுகின்றன. இந்த கார்களுக்கு உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.

மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்!

இந்த நிலையில், வரும் 2021ம் ஆண்டு முதல் ஏஎம்ஜி பிராண்டில் அறிமுகம் செய்யப்படும் புதிய கார்கள் அனைத்துமே மின்சார கார்களாக இருக்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. இது ஆட்டோமொபைல் உலகை திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பாக கருதப்படுகிறது.

மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ ஷோவில் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்தின் தலைவர் தோபியாஸ் மோயர்ஸ் இதனை தெரிவித்தார்.

மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்!

முதல்கட்டமாக ஏஎம்ஜி பிராண்டில் விற்பனையாகும் ஜிஎல்இ, ஜிஎல்எஸ் எஸ்யூவி மாடல்களின் வி8 எஞ்சினுடன் 48 வோல்ட் மின்மோட்டார் இணைந்து செயல்படும் வகையில் ஹைப்ரிட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இது சொந்தமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாக இருக்கும்.

மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்!

வரும் 2021ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் ஏஎம்ஜி கார்கள் அனைத்துமே மின்சார மாடல்களாக இருக்கும். 2025ம் ஆண்டு வாக்கில் பெர்ஃபார்மென்ஸ் ரக கார் மார்க்கெட்டிலும் மின்சார கார்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்!

வால்வோ, பிஎம்டபிள்யூ, ஆடி என முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் அனைத்துமே ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்கள் பக்கம் திரும்பி இருக்கின்றன. இதில், ஹைப்ரிட் மாடல்கள் என்பது இடைக்கால தீர்வாக இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கார்களின் விற்பனை சரசரவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Road And Track

Most Read Articles
English summary
Mercedes-AMG Performance Cars To Be Electrified From 2021.
Story first published: Wednesday, April 24, 2019, 11:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X