பெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்!!

சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமான ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களுக்கான நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்!!

அதன்படி, தற்போது கார்களின் இஃபோடெயின்மென்ட் சாதனத்தை சைகை மூலமாக கட்டுப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்த மையத்தை சேர்ந்த பொறியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

பெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்!!

கை விரல்கள் சைகையில் கட்டுப்படுத்தக்கூடிய இந்த தொழில்நுட்பத்தின் துவக்கம் முதல் இறுதி வரையிலான அனைத்து பணிகளும் இங்கேயே நடந்துள்ளது. அதாவது, வெளிநாடுகளில் செயல்படும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களின் உதவி இல்லாமல் இந்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக இங்கேயே உருவாக்கி அசத்தி உள்ளனர்.

பெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்!!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த MBUX என்ற புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தில் இந்த புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதலாவதாக, 2019ம் ஆண்டு மாடல்களாக வர இருக்கும் ஜிஎல்இ எஸ்யூவியிலும், சிஎல்ஏ கூபே ரக காரிலும் இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் அளிக்கப்பட இருக்கின்றன.

பெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்!!

இதைத்தொடர்ந்து, அனைத்து மெர்சிடிஸ் பென்ஸ் கார்களிலும் இந்த தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட இருக்கிறது. வெளிநாடுகளைவிட இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான செலவீனம் மிக குறைவாகவே இருந்தது மிகப்பெரிய சாதகமாக குறிப்பிடப்படுகிறது.

பெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்!!

இருக்கை மசாஜ் கட்டுப்பாடு, நேவிகேஷன் சாதனம், பொழுதுபோக்கு வசதி மற்றும் விளக்குகளை ஒளிரவிடுவதற்கான வசதிகளை இந்த சைகை தொழில்நுட்பம் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

பெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்!!

சென்ட்ரல் கன்சோல் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும் கேமரா மூலமாக ஓட்டுனரின் விரல் அசைவுகளை உணர்ந்து இந்த தொழில்நுட்பம் செயல்படும். ஓட்டுனர் கை விரல்களின் சைகை மொழிகளை வைத்து அது எதற்குரியது என்பதை கேமரா மூலமாக பெற்று ஆன்போர்டு கம்ப்யூட்டர் உடனுக்குடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கட்டளைகளை வழங்கும்.

பெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்!!

ஓட்டுனர் மற்றும் பயணிகளின் விரல் அசைவுகளை பிரித்தறிந்து கொள்ளும் திறனுடன் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மற்றும் ஓட்டுனர் கட்டளையை சரியாக கண்டுபிடித்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Source: Economic Times

Most Read Articles
English summary
Mercedes-Benz's new MBUX infotainment system will now get gesture controls, which have been developed by Mercedes-Benz R&D Center in Bangalore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X