பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

சொகுசான எம்பிவி கார் வாங்க விரும்புவோரின் முதல் தேர்வாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இருந்து வருகிறது. அதற்கு மேல் அதற்கு இணையான மாடல்கள் இல்லாத நிலை இருந்தது. அந்த குறையை போக்கும் விதத்தில், கடந்த ஜனவரி மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது வி க்ளாஸ் சொகுசு ரக எம்பிவி காரை இந்தியாவில் களமிறக்கியது.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

இந்தியாவில் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எம்பிவி கார் விற்பனைக்கு வந்தது. பெரும் பணக்காரர்களுக்கு இது சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. மேலும், அடிக்கடி வெளியூர் பயணிக்கும் பெரும் தொழிலதிபர்கள், நட்சத்திர விடுதிகளில் விருந்தினர்களின் போக்குவரத்துக்கு சிறந்த மாடலாகவும் மாறி இருக்கிறது.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரில் பயணிப்பதை பல படிகள் முன்னே கொண்டு செல்லும் முயற்சியில் டிசி டிசைன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடல் விரைவில் வர இருப்பதை தெரியப்படுத்துகிறது.

முன் வரிசையை இருக்கைகளில் இருந்து பின்புற பகுதியை தனியாக பிரித்து தடுப்பு அமைத்து தனி அறை போன்று மாற்றி இருக்கின்றனர். மேலும், அந்த தடுப்பில் டிவி திரை பொருத்தப்பட்டு இருக்கும் என்பது தெரிகிறது.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

இந்த காரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை எடுத்துவிட்டு, இரண்டு ராஜ இருக்கைகளை பொருத்தி இருப்பது டீசரில் தெரிகிறது. மேலும், க்ரீம் வண்ணத்தில் இரண்டு இருக்கைகளையும் மிக தாராள வசதியுடன் இருக்கிறது.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

அத்துடன் இரண்டு இருக்கைகளுக்கும் நடுவில் பெரிய ஆர்ம்ரெஸ்ட் அமைப்பை கொடுத்து அதில், க்ளைமேட் கன்ட்ரோல், டிவி திரை மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் சிஸ்டத்திற்கான கட்டுப்பாட்டு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

இரண்டு இருக்கைகளையும் 180 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. மேலும், உட்புறத்தில் பக்கவாட்டு பகுதிகள், தடுப்பு, ஆர்ம்ரெஸ்ட் பகுதிகளில் மர அலங்காரத் தகடுகள் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. க்ரோம் பீடிங்குகளும் உட்புறத்தை சிறப்பாக காட்டுகின்றன.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

லேப்டாப் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கான மடக்கி விரிக்கும் வசதியுடன் மேஜை அமைப்பு, ரீடிங் விளக்குகள், எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வேனிட்டி மிரர்கள் உள்ளிட்ட ஏராளமான சொகுசு வசதிகள் உள்புறத்தில் உள்ளன.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

இன்டீரியர் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருப்பதை தவிர்த்து எஞ்சின் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 2,143சிசி டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7ஜி ட்ரோனிக் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

இந்த காரின் சாதாரண மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 10.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 195 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காருக்கு சொகுசு சேர்த்த டிசி!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார் ரூ.70 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. கஸ்டமைஸ் செய்ய விரும்பினால் ரூ.1 கோடியை நெருங்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
DC design company is all set to release customise option for Mercedes Benz V Class luxury MPV car soon.
Story first published: Friday, April 26, 2019, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X