மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் வேரியண்ட் அறிமுக விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரின் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் வேரியண்ட் அறிமுக விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி க்ளாஸ் கார் சொகுசு ரக எம்பிவி கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. பெரும் பணக்காரர்களின் கனவு பயணங்களை நனவாக்கும் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் வேரியண்ட் அறிமுக விபரம்!

இந்த நிலையில், வி க்ளாஸ் காருக்கு போட்டியாக டொயோட்டா நிறுவனம் வெல்ஃபயர் என்ற சொகுசு எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், வி க்ளாஸ் காரின் புதிய வேரியண்ட்டை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் வேரியண்ட் அறிமுக விபரம்!

இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட வி க்ளாஸ் காரின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் வேரியண்ட் அறிமுக விபரம்!

எனவே, இந்த காரில் புதிய ஹெட்லைட், பம்பர் மற்றும் புதிய க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது. இந்த காரில் 4 இருக்கைகள் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். இந்த காரில் தரமான உதிரிபாகங்கள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் வேரியண்ட் அறிமுக விபரம்!

தற்போது விற்பனையில் இருக்கும் வி க்ளாஸ் காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் வேரியண்ட் அறிமுக விபரம்!

ஆனால், ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருக்கும் டீசல் எஞ்சின் 190 பிஎச்பி பவரையும், 239 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இந்த கார் 9ஜி ட்ரோனிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் வேரியண்ட் அறிமுக விபரம்!

வரும் 7ந் தேதி இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய மாடல் ரூ.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு போட்டியாக அமையும்.

Most Read Articles
English summary
The Mercedes-Benz V-Class Elite is all set to launch new variant of V Class car in India on 7th, November 2019.
Story first published: Monday, November 4, 2019, 11:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X