மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு ரக எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய எம்பிவி ரக காராக வந்திருக்கும் வி- கிளாஸ் காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் சொகுசு எம்பிவி கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கருதப்படுகிறது. உலக அளவில் 90 நாடுகளில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று இந்தியாவிலும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

எம்பிவி காரின் இடவசதி, செடான் கார்களின் சிறப்பம்சங்களை கலந்து கட்டி இந்த புதிய பென்ஸ் வி கிளாஸ் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 5.57 மீட்டர் நீளமும், 3.43 மீட்டர் வீல் பேஸ் கொண்டதாக வந்திருக்கிறது. இதனால், மிக அதிக இடவசதியுடைய மாடலாக வந்திருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆர் கிளாஸ் என்ற எம்பிவி காரை இந்தியாவில் விற்பனை செய்தது. இந்த நிலையில், அந்த இடத்தை நிரப்பும் வகையில், நவீன யுக சிறப்பம்சங்கள் கொண்ட இந்த வி கிளாஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எம்பிவி காரானது எக்ஸ்பிரஸ்ஸென் என்ற 7 சீட்டர் மாடலிலும், எக்ஸ்க்ளூசிவ் என்ற 6 சீட்டர் மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும். இதில், 7 சீட்டர் மாடல் கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் காம்பேக்ட் என்ற குறைவான நீளம் கொண்ட மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்- 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. மேலும், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் காரில் ஏராளமான சிறப்பு வசதிகள் உள்ளன. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், கமாண்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 15 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மெஸ்ட்டர் சர்ரவுண்ட் ஆடியோ சிஸ்டம், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், நப்பா லெதர் இருக்கைகள் என பட்டியல் நீள்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மேலும், இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், ஓட்டுனர் கவனக்குறைவை எச்சரிக்கும் அட்டென்ஷன் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் நீலம், கருப்பு, வெள்ளை மற்றும் சில்வர் ஆகிய 4 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் காரின் எக்ஸ்பிரெஸென் வேரியண்ட் ரூ.68.40 லட்சம் விலையிலும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் ரூ.81.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட சிறந்த எம்பிவி ரக காரை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மேலும், அடிக்கடி வெளியூர் பயணிக்கும் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், குடும்பத்துடன் பயணிக்க விரும்பும் பெரும் பணக்காரர்கள், நட்சத்திர விடுதிகளின் வாடிக்கையாளர் சேவைகளுக்கு இந்த கார் ஏற்ற தேர்வாக அமையும்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் சொகுசு ரக மினி வேன் என்றே கூற முடியும். இது எம்பிவி கார் ரகத்தில் புதிய அத்யாயத்தையும், சிறந்த பயண அனுபவத்தையும் இந்தியர்களுக்கு வழங்கும் என்றால் மிகையில்லை.

Most Read Articles
English summary
Mercedes-Benz V-class launched in India
Story first published: Thursday, January 24, 2019, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X