விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான இக்யூஏ எலெக்ட்ரிக் கார் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின்போது புதிய இக்யூஏ என்ற எலெக்ட்ரிக் காரின் படமும் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய மெர்சிடிஸ் பென்ஸ் தலைமை செயல் அதிகாரி ஓலா கலெனியஸ், இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுகத்தை உறுதி செய்தார்.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

அடுத்த ஆண்டு இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது பட்ஜெட் விலையிலான சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்பதால், முக்கிய எலெக்ட்ரிக் கார் மாடலாக வர இருக்கிறது.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

கடந்த 2017ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் ஷோவில் இக்யூஏ எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டது. மூன்று கதவுகளுடன் கூடிய ஹேட்ச்பேக் மாடலாக கான்செப்ட் இருந்தது. ஆனால், தற்போது இது க்ராஸ்ஓவர் ரகத்திலான அம்சங்களுடன் தற்போது இந்த கார் தயாரிப்பு நிலைக்கு உகந்ததாக மாற்றம் கண்டுள்ளது.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ காரில் பேட்டரி தொகுப்பானது இருக்கைக்கு கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் பயணிக்களுக்கு போதிய இடவசதியை அளிக்கும்.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கான பிரத்யேகமான மோடுலர் எலெக்ட்ரிக் ஆர்க்கிடெக்சர் (MEA) என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4,284 மிமீ நீளமும், 1,811 மிமீ அகலமும், 1,427 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல்பேஸ் நீளம் 2,728 மிமீ ஆக உள்ளது.இந்த கார் 5 கதவுகளுடன் வர இருப்பதால், நடைமுறை பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும்.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் காரில் இரண்டு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த கார் அதிகபட்சமாக 268 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 60 kW பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த காரில் ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகளும் உண்டு. இதனை பயன்படுத்தும்போது பயணிக்கும் தூரத்தில் வேறுபாடு இருக்கும்.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்த காருக்கு வழங்கப்படும் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 10 நிமிடங்களில் 100 கிமீ தூரம் பயணிப்பதற்கான சார்ஜ் ஏற்றும் திறனை வழங்கும். இது நிச்சயம் நீண்ட தூர பயணத்தின்போது உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.

விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் கார் பிரான்ஸ் நாட்டின் ஹம்பர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இது நிச்சயம் சொகுசு எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mercedes-Benz has confirmed that a new EQA electric car will make its global debut by next year.
Story first published: Monday, December 16, 2019, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X