சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

மெர்சிடிஸ் மேபக் பிராண்டில் மிக உயர்ரக எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 என்ற பெயரில் இந்த புதிய சொகுசு எஸ்யூவி வந்துள்ளது. பென்ட்லீ பென்டைகா, ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் மற்றும் மஸேரட்டி லெவன்டே ஆகிய மிக உயர் ரக எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படுகிறது.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

இந்த எஸ்யூவியின் முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெர்றுள்ளன. இதன் க்ரோம் பூச்சுடன் கூடிய க்ரில் அமைப்பு மிக பிரம்மாண்டமான முகப்புத் தோற்றத்தை வழங்குகிறது. பம்பர் பகுதியிலும், ஸ்கிட் பிளேட்டிலும் க்ரோம் பூச்சு பாகங்களுடன் வசீகரிக்கிறது. இதன் பானட் அமைப்பு சாதாரண ஜிஎல்எஸ் எஸ்யூவியை ஒத்திருக்கிறது.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் மிக பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகள், 23 அங்குல அலாய் சக்கரங்கள், ரூஃப் ரெயில்கள் என மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. க்ரோம் பூச்சுடன் காரின் பி பில்லரும், டி பில்லரில் மெர்சிடிஸ் மேபக் பிராண்டின் முத்திரை சின்னமும் இடம்பெற்றுள்ளன.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

இந்த எஸ்யூவியானது 4 சீட்டர் மற்றும் 5 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். மேலும், பின் இருக்கைகள் சாய்மான வசதி, மசாஜ் வசதிகளை பெற்றிருக்கும். இது பயணத்தின்போது சோர்வை போக்கும் விதமாக அமையும்.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரின் உட்புறம் மிக தாராள இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த காரில் உயர்ரக நப்பா லெதர் வேலைப்பாடுகளுடன் உன்னத உணர்வை தருகிறது. பின்புறத்தில் இரண்டு அல்லது மூன்று இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இதில், இரண்டு பக்கவாட்டு இருக்கைகளும் சாய்மான வசதியுடன் கிடைக்கும்.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

இந்த கார் 3,135 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, பின்புற இருக்கையில் அமரும் பயணிகள் 1,103 மிமீ லெக் ரூம் இடவசதியை பெறும் வாய்ப்பை பெற முடியும். இதன் 4 சீட்டர் மாடலில் நடுவில் இரண்டு இருக்கைகளுக்கும் இடையில் தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

இந்த தடுப்பு அமைப்பு ஆர்ம் ரெஸ்ட் ஆக இருப்பதுடன், இதில் கப் ஹோல்டர், ரியர் ஏசி வென்ட்டுகள், மடக்கி விரிக்கும் சிறிய அளவிலான மேஜைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது பயணத்தின்போது மிக சொகுசான அனுபவத்தையும், வசதிகளையும் தரும்.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

இந்த காருக்கு ஆப்ஷனலாக ஏர் பேலன்ஸ் என்ற விசேஷ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் நறுமணம் வழங்கும் திரவியம் காருடன் வழங்கப்படும். அழகிய வேலைப்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய டேஷ்போர்ட் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு, அடாப்டிவ் டேம்பிங் சிஸ்டம், இ-ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட உயர் வகை சஸ்பென்ஷன் தொழில்நுட்பங்கள் உள்ளன. இதனால், அலுங்கல், குலுங்கல் இல்லாத மிக சொகுசான பயண அனுபவத்தை பெற முடியும்.

சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!

மேலும், ஏதாவது ஒரு சக்கரம் பள்ளத்தில் விழுந்தால், அதன் அதிர்வுகள் டேம்பர் மூலமாக தானாக சரிசெய்து கொள்ளும். இதனால், அதிர்வுகள் இல்லாத பயணத்தை இந்த கார் வழங்கும் என்று மெர்சிடிஸ் மேபக் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி உயர்ரக சொகுசு எஸ்யூவி மாடல்களை வாங்க திட்டமிட்டிருப்போரின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Mercedes-Maybach has revealed of its GLS 600 luxury SUV and it will enter the international market by next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X