இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்கால உலகை ஆளப்போகின்றன. ஆனால் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் இன்னும் பெரிதாக சூடுபிடிக்கவில்லை. தற்போதைய மஹிந்திரா மற்றும் டாடா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் எலெக்ட்ரிக் தயாரிப்புகளை மட்டுமே இந்திய மார்க்கெட் சந்தித்துள்ளது.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

ஆனால் வருங்காலத்தில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் சூடுபிடிக்கும் என நம்பப்படுகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரத்தை தொடங்கவுள்ளது.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில்தான் இந்திய மார்க்கெட்டில் நுழைந்தது. ஆனால் அதன் முதல் தயாரிப்பான எம்ஜி ஹெக்டர் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் இந்திய மார்க்கெட்டில் நேற்றுதான் (மே 15) எம்ஜி ஹெக்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டிற்கு என பெரிய திட்டங்களை வைத்துள்ளது.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

இதில், எலெக்ட்ரிக் கார்களும் அடக்கம். இஇஸட்எஸ் (eZS) எனும் எலெக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் எம்ஜி நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான்.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

ஹெக்டருக்கு அடுத்தபடியாக பார்த்தால் இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது தயாரிப்பு இதுவாகும். இதுவும் எஸ்யூவி ரக கார்தான். ஆனால் இது எலெக்ட்ரிக் எஸ்யூவி.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

இந்த சூழலில் எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது எம்ஜி இஇஸட்எஸ் கேமரா கண்களில் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

இதுகுறித்து ஆட்டோகார் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

இது எம்ஜி இஸட்எஸ் எஸ்யூவி காரின் ப்யூர் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும். ஸ்டைலிஸ் எஸ்யூவி காரான எம்ஜி இஸட்எஸ் சீன மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. டிசைன் அடிப்படையில் பார்த்தால், கிட்டத்தட்ட இஸட்எஸ் கார் போலவே இஇஸட்எஸ் காரும் உள்ளது.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

ஆனால் ஒரு சில மாற்றங்கள் இருக்கவே செய்கின்றன. சீன மார்க்கெட்டிற்கான இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இஇஸட்எஸ் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 335 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி... டிசம்பரில் அறிமுகம்...

பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இது வெறும் 3.1 வினாடிகளில் எட்டி விடும் என எம்ஜி நிறுவனம் கூறுகிறது. ஆனால் எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டிற்கும் இதே பவர்ட்ரெயினை கொண்டு வருமா? என்ற கேள்விக்கு தற்போது உறுதியாக பதில் தெரியவில்லை.

Most Read Articles
English summary
MG eZS Electric SUV Spotted Testing In India; To Be Launched In December 2019. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X