எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள்!

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும், எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த காரின் இன்டீரியர் ஸ்பை படங்களும் இப்போது வெளியாகி இருக்கின்றன.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள்!

ஹெக்டர் எஸ்யூவியை தொடர்ந்து இரண்டாவது மாடலாக இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். தற்போது இறுதிக்கட்டமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார். தற்போது அதன் புதிய ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள்!

குறிப்பாக, காரின் இன்டீரியரை காணும் வாய்ப்பு இதில் கிடைத்திருக்கிறது. எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரி காரில் முழுவதுமான கருப்பு வண்ண டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் சில்வர் வண்ண கேப் கொண்ட கியர் லிவர் ஆகியவை முக்கிய அம்சங்களாக தெரிகின்றன.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த காரில் 110 kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 45.6kWh பேட்டரியும் உள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 6.5 மணிநேரம் பிடிக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நேற்று டீசர் வெளியிடப்பட்டுள்ளதால், முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. தனது ஷோரூம்கள் மற்றும் பொது இடங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை திறப்பதற்கான முயற்சிகளில் எம்ஜி மோட்டார் ஈடுபட்டுள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள்!

ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு இது மிக நேரடி போட்டியாக இருக்கும்.

Image Courtesy: Krishnapalsinh Virpara

Most Read Articles
English summary
MG eZS SUV has been spotted testing in India ahead of its launch next year. The spy pics showcase the electric SUV actively testing on Indian roads. The eZS when launched will rival the Hyundai Kona electric SUV.
Story first published: Wednesday, September 18, 2019, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X