எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான காரணம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

கடந்த மாதம் 27ந் தேதி எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.12.18 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வந்தததையடுத்து, வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

அறிமுகம் செய்யப்பட்டு 20 நாட்களில் இதுவரை 21,000 முன்பதிவுகளை எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் மாதத்திற்கு 2,000 ஹெக்டர் எஸ்யூவிகளை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இதனால், ஹெக்டர் எஸ்யூவிக்கான காத்திப்பு காலம் 6 மாதங்கள் வரை நீள்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

அதாவது, இந்த ஆண்டுக்கான முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்டதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. மேலும், காத்திருப்பு காலம் நீண்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைவதை தவிர்ப்பதற்காக, ஹெக்டர் எஸ்யூவிக்கான முன்பதிவு இன்றுமுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எம்ஜி மோட்டார் அறிவித்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இந்த சூழலில், ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எம்ஜி நிறுவனம் கையில் எடுத்துள்ளது. வரும் மாதங்களில் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக எம்ஜி தெரிவித்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

வரும் அக்டோபர் மாதத்தில் மாதத்திற்கு 3,000 ஹெக்டர் எஸ்யூவிகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்டுகளுக்கு அதிக முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும், அதேபோன்றே பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுக்கே அதிக வரவேற்பு இருப்பதாகவும் எம்ஜி தெரிவித்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

மிட்சைஸ் எஸ்யூவி சந்தையில் மிகப்பெரிய மாடலாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக இடவசதியுடன் கூடிய 5 சீட்டர் எஸ்யூவி மாடலாக எம்ஜி ஹெக்டர் பெயர் பெற்றுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

அத்துடன், இந்த எஸ்யூவியில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய இணைப்பு வசதியை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, நேவிகேஷன் ஜியோ ஃபென்சிங், வாய்ஸ் கமாண்ட் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற முடியும். இந்த எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா, சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. பின் இருக்கைகள் சாய்மான வசதியையும் பெற்றுள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில்1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வந்துள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலானது ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டதாகவும் கிடைக்கிறது. ஹைப்ரிட் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 15.81 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

மொத்தத்தில் மிட்சைஸ் எஸ்யூவி கார் சந்தையில் மிக சரியான விலையில் அதிக சிறப்பம்சங்களை பெற்றிருப்பதால் இந்த காருக்கு அதிக வரவேற்பை கிடைத்துள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு இருப்பதும், அதிக மாதங்கள் காத்திருப்பு காலம் நிலவுவதாலும், கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

எனினும், வாடடிக்கையாளர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில், விரைவில் இந்த புதிய எஸ்யூவிக்கான முன்பதிவு மீண்டும் துவங்கப்படும் என்று தெரிகிறது. கியா செல்டோஸ் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
UK based carmaker MG Motor has halted Hector SUV bookings temporarily in India.
Story first published: Thursday, July 18, 2019, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X