புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

வரும் 20ந் தேதி புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கும் கொண்டு வரப்பட இருக்கிறது. முதலில் 5 சீட்டர் மாடலில்தான் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

ஆனால், இதன் 7 சீட்டர் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. வரும் 2020 ஜனவரியில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி தெரிவிக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

எம்ஜி ஹெக்டர் 5 சீட்டர் மாடலைத் தொடர்ந்து எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் வர இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி டிசைனில் மிக அசத்தலாகவும், மிகவும் பிரிமீயம் மாடலாகும் இருக்கும் என்பதால், இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டியுள்ளது. இந்த காரில் நேரடி இணைய வசதியை அளிக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் இரு மாடல்களில் வருகிறது. அதாவது, கூடுதலாக மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் கொடுக்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ஹைப்ரிட் மாடலில் இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடுதலாக 48 வோல்ட் லித்தியம் அயான் பேட்டரி கொண்ட மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இதன் மின் மோட்டார் 20 என்எம் டார்க் திறனை கூடுதலாக பெட்ரோல் எஞ்சினுக்கு வழங்கும்.

புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடலின் அறிமுக விபரம் வெளியானது!

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தில், ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இ-பூஸ்ட் ஆகிய மூன்று விஷயங்கள் மூலமாக காரின் எரிபொருள் சிக்கனம் அதிகரிப்பதோடு, மாசு உமிழ்வும் குறைவாக இருக்கும்.

Most Read Articles
English summary
According to reports, MG Motor is planning to launch 7 seater Hector SUV in India by January next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X